
போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது போக்கோ நிறுவனம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனை நாளை மதியம் 12 மணி முதல் முன்பதிவு செய்ய முடியும். பின்பு வரும் ஜூலை 26-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும். குறிப்பாக கன்மெட்டல் சில்வர் மற்றும் பிரிடேட்டர் பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.
6.67-இன்ச் Turbo AMOLED10-பிட் டிஸ்பிளே
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் Turbo AMOLED10-பிட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு எச்டிஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்டபோன்.
Dimensity 1200 SoC சிப்செட் வசதி
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
64எம்பி மெயின் கேமரா
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 4கே வீடியோ பதிவு ஆதரவைக் கொண்டுள்ளதுஇந்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன்.
போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.
5065 எம்ஏஎச் பேட்டரி
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5065 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன். எனவே விரைவாக இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய முடியும்.
டூயல் சிம் 5ஜி, வைஃபை ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்3 ஜிடி மாடலின் விலை ரூ.26,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்3 ஜிடி மாடலின் விலை ரூ.28,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்3 ஜிடி மாடலின் விலை ரூ.30,999-ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக