
நெட்பிளிக்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் விளையாட்டுகளையும் அதன் சேவைக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. வீட்டிலேயே இருந்தபடி பொழுதுபோக்கு அம்சங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கிறது. நெட்பிளிக்ஸ் தளத்திற்கு புதிதாக வரும் சப்ஸ்கிரைபர்களின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் காரணத்தால் நிறுவனம் வீடியோ கேம்களில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் ஸ்ட்ரீமிங் சேவை தற்போது வீடியோ கேம்கள் சேவையாகவும் விரிவடைய உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தாதாரர்களுக்கு கூடுதல் செலவு இல்லாமல் மொபைல் சாதனங்களுக்கான விளம்பரம் இல்லாத மொபைல் கேம்களை வழங்க திட்டமிட்டிருக்கிறது. ஸ்ட்ரீமிங் சேவையை முழுமையாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், சீரிஸ் உட்பட பல்வேறு ஸ்ட்ரீமிங் சேவைகளை நிறுவனம் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
ஊரடங்கு அமலில் இருந்த காலக்கட்டத்தில் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. இதனால் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் புதுப்பிப்பு எண்ணிக்கையும் அதிகளவு குறைந்து வருகிறது. குறிப்பாக கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து மட்டும் 4.30 லட்சம் வாடிக்கையாளர்கள் நெட்பிளிக்ஸ்-ல் இருந்து வெளியேறி உள்ளனர்.
இதையடுத்து வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், புதுப்பித்தல்களை அதிகரிக்கவும் வீடியோகேம்களை கொண்டவர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல் இந்த நெட்பிளிக்ஸ் வீடியோகேம் அம்சம் முதலில் மொபைல் வெர்ஷனுக்கே அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சேவை அறிமுகம் குறித்து நெட்ஃபிளிக்ஸ் உறுதப்பட தகவலை தெரிவிக்கவில்லை. வீடியோகேம்களை பொறுத்தவரையில் பயனர்கள் ஒவ்வொரு கட்டமாக அடுத்தடுத்து கட்டத்துக்கு முன்னேறி செல்லவே விரும்புவார்கள், இதன்காரணமாக நெட்பிளிக்ஸ் பயனர்கள் தொடர்ந்து புதுப்பிப்பு செய்வார்கள் என கூறப்படுகிறது.
சந்தாதாரர்கள் வீடியோகேம் பயன்பாட்டை மேற்கொள்வதற்கு எந்த கூடுதல் தொகையும் செலுத்தத் தேவையில்லை. அதேபோல் வீடியோகேம் பயன்பாடு முழுமையாக வளர்ந்து வரும் துறை என்ற காரணத்தால் இதில் முதலீடு செய்ய நிறுவனம் தயாராக இருக்கிறது. அதேபோலு இதுகுறித்து நெட்பிளிக்ஸ் கூறுகையில் அனிமேஷன் தொடர், ஒரிஜினல் படங்களை போன்றே இது ஒரு கண்டென்ட்தான் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்தாண்டு பிரைம் வீடியோ தளங்களில் ஒன்றான அமேசான், லூனா என்ற கிளவுட் கேமிங் விளையாட்டை அறிமுகம் செய்தது. கேமிங் சேவையில் சொந்த முதலீட்டை நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வீடியோ கேம் துரை ஆண்டுக்கு 21% வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நெட்பிளிக்ஸ் இந்த நடவடிக்கை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இல்லை என கூறப்படுகிறது. கடந்தாண்டு ஆப்பிள் டிவி பிளஸை அறிமுகப்படுத்திய ஆப்பிள், 2019 ஆம் ஆண்டில் மொபைல் கேமிங் சந்தா சேவையான ஆப்பிள் ஆர்கேட் மூலம் தனது வாடிக்கையாளர்களை விரிவுப்படுத்த முயன்றது என கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக