Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

5000mAh பேட்டரி; 6.51-inch டிஸ்பிளே; நினைச்சு பார்க்காத விலையில் புதிய Vivo Phone!

Vivo நிறுவனம் மிகவும் அமைதியாக ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது Vivo Y12G மாடல் ஆகும். என்ன விலை, எப்போது எதன் வழியாக வாங்க கிடைக்கும், என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும், இதோ முழு விவரங்கள்.

Vivo நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக விவோ Y12G மாடல் எந்த விதமான அறிமுக அறிவிப்பும் இல்லாமல் இந்தியாவிற்கு வந்துள்ளது.

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் வாட்டர் ட்ராப்-ஸ்டைல் டிஸ்பிளே நாட்ச் வடிவமைப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 எஸ்ஓசி, 20: 9 டிஸ்ப்ளே, Multi-Turbo 3.0 போன்ற கஸ்டமைஸ்டு அம்சங்கள் போன்றவைகளை கொண்டுள்ளது.

அம்சங்கள் மற்றும் விலையை வைத்து பார்க்கும் போது இந்த புதிய விவோ ஒய் 12 ஜி ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் கேலக்ஸி எம் 12, ரெட்மி 9 பவர் மற்றும் போக்கோ எம் 2 போன்றவற்றுடன் கடுமையாக போட்டியிடும் என்றே கூறலாம்.

நினைவூட்டும் வண்ணம் இந்த லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Y12s மாடலை போலவே உள்ளது.

இந்தியாவில் விவோ ஒய் 12 ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

விவோ ஒய் 12 ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இந்தியாவில் ரூ.10,990 க்கு வாங்க கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் தற்போது விவோ இந்தியா இணையதளத்தில் க்ளேசியர் ப்ளூ மற்றும் பாண்டம் பிளாக் நிறங்களில் வாங்க கிடைக்கிறது.

மேலும் இது விரைவில் அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம், டாடாக்லிக் மற்றும் அனைத்து பங்குதாரர் சில்லறை கடைகளிலும் பட்டியலிடப்படும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம்.

Vivo Y12G அம்சங்கள்:

- டூயல் சிம் (நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 11 எஸ் அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11
- 6.51 இன்ச் எச்டி+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்பிளே
- 20: 9 திரை விகிதம்
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 SoC
- 3 ஜிபி ரேம்

- டூயல் ரியர் கேமரா அமைப்பு
- எஃப்/2.2 லென்ஸுடன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார்
-எஃப்/2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் (f/1.8 லென்ஸ்)

- 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 4G LTE
- வைஃபை
- ப்ளூடூத் v5.0
- GPS/ A-GPS
- FM ரேடியோ
- மைக்ரோ- USB போர்ட்
- 3.5mm ஹெட்ஜாக்
- ஆக்ஸிலரோமீட்டர்
,- ஆம்பியண்ட் லைட் சென்சார்
- கைரோஸ்கோப்
- மேக்னடோமீட்டர்
- ப்ராக்ஸிமிட்டி சென்சார்

- 5,000mAh பேட்டரி
- 10W சார்ஜிங் ஆதரவு
- அளவீட்டில் 164.41x76.32x8.41 மிமீ
- எடையில் 191 கிராம்.


Vivo Y12G விவரங்கள்
ஃபெர்பார்மன்ஸ்Mediatek MT6765 Helio P35 (12nm)
டிஸ்பிளே6.51 inches (16.53 cm)
சேமிப்பகம்32 GB
கேமரா13 MP + 2 MP
பேட்டரி5000 mAh
price_in_india14618
ரேம்3 GB

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக