Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

அறிய வாய்ப்பு: யூடியூப்பில் இதை மட்டும் செய்தாலே போதும்- மாதம் ரூ.7.4 லட்சம் வரை சம்பாதிக்கலாம்!

சூப்பர் சாட் என்ற புதிய அம்சம்

டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றே யூடியூப் ஷார்ட்ஸ் பயன்பாடும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக யூடியூப் நிர்வாகம் ஷார்ட்ஸ் பயன்பாட்டுக்காகவே 2021-22 ஆம் ஆண்டுக்கு கூடுதலாக 100 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் ஷார்ட்ஸ் வெளியிடும் பயனர்களுக்கு வருமானம்

இனி இன்ஸ்டார ரீல்ஸ் போன்றே யூடியூப் பயன்பாட்டில் யூடியூப் ஷார்ட்ஸ் வெளியிடும் பயனர்களுக்கு வருமானம் கிடைக்கும் என யூடியூப் தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் தெரிவித்தார். பயனர்கள் 30 வினாடிகள் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவை வெளியிட்டு அதற்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் ரூ.7 லட்சம் வரை ஒரு மாதத்திற்கு வருமானம் ஈட்ட முடியும் என யூடியூப் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ட் வீடியோவில் அதிக பார்வையாளர்கள்

அதேபோல் யூடியூப்பர்கள் வெளியிடும் ஷார்ட் வீடியோவில் அதிக பார்வையாளர்கள் பெறும் 1000 திறமைவாய்ந்த படைப்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் பெற்ற பார்வையாளர்கள் அடிப்படையில் மாதம் ரூ.74,000 முதல் ரூ.7.4 லட்சம் வரை வழங்கப்பட இருக்கிறது என யூடியூப் தரப்பில் யூடியூப் தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் குறிப்பிட்டார்.

சூப்பர் சாட் என்ற புதிய அம்சம்

யூடியூப் ஷார்ட்ஸ் அம்சத்தில் சூப்பர் சாட் என்ற புதிய அம்சம் இருக்கிறது. இந்த புதிய அம்சம் மூலம் பார்வையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டாலும் வருவாயை அதிகரிக்கச் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுளுக்கு சொந்தமான யூடியூப் தளம் யூடியூப் ஷார்ட்ஸ்-ல் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. நிறுவனம் படைப்பாளர்களுக்கு என 100 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது.

படைப்பாளர்களுக்கு மாதம் ரூ.7400 முதல் ரூ.740000 வரை வருமானம்

வைரல் வீடியோக்களுக்கு இந்த முதலீட்டை நிறுவனம் செலவு செய்ய இருக்கிறது. யூடியூப் எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் மூலம் படைப்பாளர்கள் மாதம் ரூ.7400 முதல் ரூ.740000 வரை வருமானம் ஈட்டலாம். இதற்கு யூடியூப் படைப்பாளர்கள் பயனர்களை கவர்ந்து பார்வையாளர்களை அதிகரிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட வேண்டும்.

பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் வீடியோக்களின் ஈடுபாடு

ஷார்ட்ஸ் மூலம் படைப்பாளர்கள் சம்பாதிக்கக்கூடிய தொகையானது பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வீடியோக்களின் ஈடுபாட்டைப் பொறுத்தது என யூடியூப் தெரிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு முந்தைய மாதமே படைப்பாளர்களை அவர்களது சேனலுக்கான மொத்த ஷார்ட்ஸ் செயல்திறனின் போனஸ் கட்டணத்தை கோரும்படி கேட்கப்படும்.

யூடியூப்பில் ஷார்ட்ஸ் வீடியோ பதிவிட்டு சம்பாதிக்கலாம்

ஒரு குறிப்பிட்ட மாதம் மட்டுமின்றி மொத்த மாத செயல்பாட்டையும் யூடியூப் கருத்தில் கொள்ளும். இதன் பொருள் ஒரு மாதம் யூடியூப் படைப்பாளர்கள் தகுதி பெறவில்லை என்றாலும் அவர்கள் கருத்தில் கொள்ளப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. போனஸுக்கு தகுதிபெற குறிப்பிட்ட செயல்திறன் வரம்பு என எதுவும் இல்லை. இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், இந்தோனேசியா, ஜப்பான், மெக்ஸிகோ, நைஜீரியா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா படைப்பாளர்களும் இந்த நிதி மூலம் பணம் சம்பாதிக்கலாம். விரைவில் அதிக நாட்டு படைப்பாளிகளும் தகுதி பெறுவார்கள் என யூடியூப் தெரிவித்துள்ளது.

தகுதியான ஷார்ட்ஸை பதிவேற்ற வேண்டும்

யூடியூப் சேனல்கள் கடந்த 180 நாட்களில் குறைந்தது ஒரு தகுதியான ஷார்ட்ஸை பதிவேற்றியிருக்க வேண்டும். ஷார்ட்ஸ் வீடியோ அசல் உள்ளடக்கமாக இருத்தல் கட்டாயம். அதாவது வாட்டர் மார்க்ஸ் கொண்ட வீடியோக்கலை பதிவேற்றம் செய்பவர்கள், பிற லோகோக்கள் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போதும், இன்ஸ்டாகிராம் டிக்டாக் போன்ற வீடியோக்களை இதில் பதிவேற்றம் செய்யும் போதும் இதற்கு தகுதி பெற மாட்டார்கள். பிற படைப்பாளர்கள் பதிவேற்ற வீடியோவை பயன்படுத்தும் போதும் இதற்கு தகுதி பெறமாட்டார்கள்.

18 வயது நிரம்பியிருக்க வேண்டும்

படைப்பாளர்கள் அந்தந்த நாட்டின் தகுதியுடைய வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் அதாவது இந்தியாவில் 18 வயது அல்லது அதற்கு மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக