
சீன அரசு டெக் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் தீவிரம் காட்டி வரும் நிலையில், அலிபாபா முதல் பல முன்னணி டெக் சேவை நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் வைத்தது.
இதன் படி தற்போது சீனாவின் முன்னணி மொபைல் சேவை நிறுவனமான டென்சென்ட் இசை துறையில் செய்த குளறுபடிகளைக் கண்டுபிடித்துள்ளது, மட்டும் அல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளையும், உத்தரவுகளை விதித்துள்ளது சீன அரசு கீழ் இயங்கும் சீனாவின் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு.
டென்சென்ட் நிறுவனம்
டென்சென்ட் நிறுவனம் சீனா மியூசிக் கார்பரேஷன் நிறுவனத்தைக் கைப்பற்றிப் பின்பு ஆன்லைன் மியூசிங் சந்தை மற்றும் வர்த்தகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. ஆனால் இந்த வளர்ச்சி அடையப் பல விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், மோனோபோலி ஆக இயங்கி வருகிறது.
சீன அரசு
இதைச் சீன அரசின் சமீபத்தில் அதிரடி நடவடிக்கையில் கடுப்படித்துள்ள நிலையில், சீன சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்திற்கு எந்த ஒரு நிறுவனம், பேண்ட் ஆகியவற்றுடன் exclusive music copyright ஒப்பந்தம் செய்யத் தடை விதித்துள்ளது.
சந்தை விதிகள்
இதுமட்டும் அல்லாமல் சந்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்திற்கு 5 லட்சம் யுவான் அபராதம் விதித்துள்ளது சீன சந்தை கட்டுப்பாட்டு ஆணையம். இது இசைத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்திருந்தாலும், வர்த்தகம் மற்றும் வருவாய் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AntiTrust நடவடிக்கை
சீன அரசு சமீபத்தில் சீன டெக் நிறுவனங்கள் மீது AntiTrust நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்கு ஆரம்பமாக இருந்து சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் மீது ஏற்கனவே 2.75 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் கீழ் தொடர்ந்து அலிபாபா குழுமத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் தான் வைத்துள்ளது.
இசை உரிமைகள்
சீன அரசின் இந்த நடவடிக்கை மூலம் டென்சென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ள அனைத்து இசை உரிமைகளைத் தத்தம் நிறுவனம் மற்றும் தனிநபர்களுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் போட்டிதன்மை என்பது பொது உடமையாக மாறும்.
ஆதிக்கம் தகர்ப்பு
டென்சென்ட் நிறுவனம் கைப்பற்றிய இசை நிறுவனங்கள் மூலம் சீனாவின் சுமார் 80 சதவீதம் exclusive music library தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஆதிக்கம் மூலம் புதிய நிறுவனங்கள் உருவாக முடியாமல் தவிப்பது மட்டும் அல்லாமல் இசை பயன்பாட்டுக்காகத் தனிநபர் முதல் நிறுவனங்கள் வரையில் அனைவரும் ஒரே நிறுவனத்தைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வீடியோகேம் ஸ்ட்ரீமிங் தளம்
இதோடு சமீபத்தில் டென்சென்ட் நிறுவனம் சீனாவின் இரு பெரும் ஆன்லைன் வீடியோகேம் ஸ்ட்ரீமிங் தளமான Huya மற்றும் DouYu ஆகியவற்றை இணைக்கத் திட்டமிட்டது. இந்த இணைப்பின் மூலம் இத்துறையிலும் மோனோபோலியாக இருக்கத் திட்டமிட்ட டென்சென்ட் கனவிற்குச் சீன அரசு தடை விதித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக