
உலகின்
முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபர் கடந்த சில வருடங்களாகவே
அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து, பல நாடுகளில் இருந்து தனது வர்த்தகத்தை
விற்பனை செய்யும் வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் உபர் நிறுவனத்தில்
முதலீடு செய்திருந்த முக்கிய முதலீட்டாளரான ஜப்பான் சாப்ட்பேங்
குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
சமீப காலமாக ஜப்பான் நாட்டின் சாப்ட்பேங்க் செய்த சீன நிறுவன முதலீடுகள் பெருமளவிலான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் லாபத்தைப் பார்க்க முடிவு செய்துள்ளது சாப்ட்பேங்க். இதன் வாயிலாகவே தற்போது உபர் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்கிறது.
சாப்ட்பேங்க் முதலீடுகள்
சாப்ட்பேங்க் முதலீடு செய்த Didi குளோபல் மற்றும் அலிபாபா நிறுவனப் பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் காரணத்தால், உபர் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்க்க முடிவு செய்துள்ளது சாப்ட்பேங்க் நிர்வாகக் குழு.
45 மில்லியன் பங்குகள் விற்பனை
இத்திட்டத்தின் படி உபர் நிறுவனத்தின் 45 மில்லியன் பங்குகளை விற்பனை செய்யச் சாப்ட்பேங்க் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தப் பங்குகளை வாங்க விரும்புவோர் 30 நாள் லாக்இன் காலத்தைக்கொண்டு புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Didi, அலிபாபா
இந்த மாதம் மட்டும் சாப்ட்பேங்க் முதலீடு செய்த Didi குளோபல் 37 சதவீத சரிவும், அலிபாபா 14 சதவீத சரிவையும் பதிவு செய்துள்ளது. இதை நஷ்ட அளவீட்டைச் சமாளிக்கவே தற்போது உபர் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விற்பனை மூலம் சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் உபர் பங்குகளின் எண்ணிக்கை 100 மில்லியனுக்குக் குறைவாக இருக்கும்.
சாப்ட்பேங்க் பங்குகள் உயர்வு
உபர் பங்குகளை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியான பின்பு சாப்ட்பேங்க் குரூப் பங்குகள் 4.1 சதவீதம் உயர்வைப் பதிவு செய்துள்ளது. சீனா அரசு டெக் நிறுவனங்கள் மீது காட்டி வரும் அதிரடி நடவடிக்கை சாப்ட்பேங்க் முதலீட்டைப் பதம் பார்த்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக