மோட்டோ ஜி ப்யூர், மோட்டோ இ40 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். மோட்டோ ஜி ப்யூர் அமெரிக்காவிலும், மோட்டோ இ40 ஐரோப்பாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ இ 40 மற்றும் மோட்டோ ஜி ப்யூர்
மோட்டோ இ 40 மற்றும் மோட்டோ ஜி ப்யூர் ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மோட்டோ ஜி ப்யூர் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோ இ40 ஐரோப்பாவிலும் அதே சமயத்தில் மோட்டோ ஜி ப்யூர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மோட்டோ இ40 சாதனமானது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாதுகாப்பு அம்சத்துக்கு பின்புற கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது. பின்புறத்தில் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 12 ஆம் தேதி இந்திய அறிமுகத்திற்கு திட்டமிடப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பே இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ இ 40, மோட்டோ ஜி ப்யூர் விலை
மோட்டோ இ 40, மோட்டோ ஜி ப்யூர் விலை மற்றும் விற்பனை குறித்து பார்க்கையில், புதிய மோட்டோ இ40 விலை ஆனது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.12,900 ஆக இருக்கிறது. இது சார்கோல் ஆஷ் மற்றம் க்ளே இளஞ்சிவப்பு வண்ண விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் கிடைக்கும் விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை. இந்தியாவில் மோட்டோ இ40 அக்டோபர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரூ.12,000 என்ற விலைப்பிரிவில் சாதனம்
மோட்டோ ஜி ப்யூர் சாதனத்தை பொறுத்தவரை, இந்த சாதனம் இந்திய விலை மதிப்புப்படி ரூ.12,000 என்ற விலைப்பிரிவில் இருக்கிறது. அமேசான்.காம் மற்றும் மோட்டோரோலா.காம் உள்ளிட்ட தளங்களில் இந்த சாதனம் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 14 முதல் வெரிசோனில் விற்பனைக்கு வரும் எனவும் வரும் மாதங்களில் கனடாவிலும் புதிய மோட்டோ ஜி ப்யூர் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இது ஒற்றை டீப் இண்டிகோ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.
மோட்டோ இ40 விவரக்குறிப்புகள்
மோட்டோ இ40 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. 4 ஜிபி ரேம் உடன் வருகிறது. யூனிசாக் டி 700 ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. உள்சேமிப்பு 64 ஜிபி ஆதரவோடு வருகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டை பொருத்தும் வசதியும் இருக்கிறது.
48 மெகாபிக்சல் பிரதான கேமரா
மோட்டோ இ40 ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா உடன் வருகிறது. மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது சிறந்த இரவு நேர புகைப்படத்துடன் வருகிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த சாதனம் 40 மணி நேரம் வரை நீடிப்பு ஆயுள் உடன் வருகிறது.
மோட்டோ ஜி ப்யூர் சிறப்பம்சங்கள்
மோட்டோ ஜி ப்யூர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், மோட்டோ ஜி ப்யூர் சாதனமானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) உடன் ஐபிஎஸ் டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த சாதனம் 269 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இதில் இருக்கிறது. 32 ஜிபி வரை உள்சேமிப்பு வசதியோடு இந்த சாதனம் வருகிறது.
13 மெகாபிக்சல் பிராதான கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி ப்யூர் சாதனமானது 13 மெகாபிக்சல் பிராதான கேமராவுடன் வருகிறது. கூடுதலாக 2 மெகாபிக்சல் கேமரா என இரட்டை கேமரா வசதியோடு வருகிறது. கேமரா அம்சங்களை பொறுத்தவரையில் ஒற்றை எல்இடி ஃபிளாஷ் வசதியும் இருக்கிறது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
4000 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோ இ40 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரை, இதில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஐபி52 மதிப்பிடப்பட்ட தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் ஆதரவோடு வருகிறது. இதன் எடை 188 கிராம் ஆக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக