மிகவும்
அதிகம் எதிர்பார்த்த பிளாக் ஷார்க் 4எஸ் ஸ்மார்ட்போன் ஆனது வரும் அக்டோபர்
13-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த
சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில்
அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது. அதேபோல் பிளாக் ஷார்க்
ஸ்மார்ட்போன்கள் கேமிங் வசதிக்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே
கூறலாம். அதன்படி இப்போது வரும் பிளாக் ஷார்க் 4எஸ் ஸ்மார்ட்போனும் சிறந்த
கேமிங் ஆதரவைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இந்த பிளாக் ஷார்க் 4எஸ் ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்புதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும். மேலும் ஆன்லைனில் கசிந்த பிளாக் ஷார்க் 4எஸ் ஸ்மார்ட்போனின்அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிளாக் ஷார்க் 4எஸ் ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதியுடன்இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
இந்த பிளாக் ஷார்க் 4எஸ் ஸ்மார்ட்போனில் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதாவது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் வசதி கேமிங் போன்ற அனைத்திற்கு மிக அருமையாக பயன்படும். அதேபோல் ஸ்மார்ட்போனை வேகமாக செயல்பட வைக்கும் திறமை கொண்டது இந்த ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்.
வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் ஆதரவுடன் இந்த பிளாக் ஷார்க் 4எஸ் ஸ்மார்ட்போன்வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த பிளாக் ஷார்க் 4எஸ் ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த பிளாக் ஷார்க் 4எஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். மேலும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்களும், சென்சார் வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
5G, இரட்டை சிம் ஆதரவு, வைஃபை, ப்ளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான பிளாக் ஷார்க் 4எஸ் ஸ்மார்ட்போன். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக