Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 அக்டோபர், 2021

உங்கள் FD-க்கான வருமானத்தை அதிகரிக்க இதை செய்யுங்க..!

வட்டியில் மாற்றமில்லை

இன்று நடந்த இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் மக்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமாக ரெபோ விகிதத்தினை மாற்றம் செய்யாமல் அறிவித்துள்ளது.

இது ஒரு புறம் கடன் களுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்க காரணமாக அமைந்தாலும், மறுபுறம் வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் வரலாறு காணாத அளவு சரிவில் உள்ளது.

மேலும் தற்போதும் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாத நிலையில், தற்போதைக்கு வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பில்லை எனலாம். ஆக அப்படியிருக்கையில் உங்களது வங்கி வைப்பு நிதியின் மூலம் எப்படி வருமானத்தை பெருக்குவது? வாருங்கள் பார்க்கலாம்.

வட்டியில் மாற்றமில்லை

தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியானது 8வது முறையாக வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. இது ரெபோ விகிதம் மற்றும் ரிவர்ஸ் விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. இது வழக்கபோல 4% மற்றும் 3.35% ஆகவே தொடரும் என அறிவித்துள்ளது. இது கடந்த 2001க்கு பிறகு மிக குறைந்த விகிதமாகும்.

ஷார்ட் டெர்ம் டெபாசிட்

இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ளன. இந்த நிலையில் உங்களது வைப்பு நிதியில் வருமானம் அதிகரிக்க என்ன செய்யலாம், வாருங்கள் பார்க்கலாம். ஷார்ட் டெர்ம் வட்டி விகிதம் முதலில் அதிகரிக்கலாம். வட்டி விகிதம் அதிகரிக்கும்போது, முதலில் ஷார்ட் டெர்ம் வட்டி விகிதங்கள் உடனடியாக மாறும் என்பதால், ஷார்ட் டெர்ம் டெபாசிட்டினை செய்யலாம்.

நீண்டகால டெபாசிட் செய்யலாம்

நீங்கள் ஏற்கனவே செய்துள்ள வங்கி பிக்சட் டெபாசிட்டினை புதுபிக்க விரும்பினாலோ அல்லது புதியதாக செய்ய விரும்பினால் குறுகிய கால வைப்பு நிதியை நாடலாம். இதனால் உங்களது தொகையானது நீண்டகாலத்திற்கு முடக்கப்படாது. வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது நீங்கள், நீண்டகால அல்லது இடைக்கால விகிதங்களை அதிகரிக்கும்போது டெபாசிட்டை செய்யலாம்.

பிரித்து பிரித்து டெபாசிட் செய்யலாம்

வட்டி விகிதம் குறைவாக உள்ளபோது உங்களது பிக்சட் டெபாசிட் புதுபிக்கப்படுமானால், அந்த காலகட்டத்தில் வட்டி விகிதம் குறைவாக இருக்கலாம். இதனால் உங்களது வைப்பு நிதியை பிரித்து பிரித்து டெபாசிட் செய்யலாம். இதன் மூலம் டெபாசிட் வெவ்வேறு கால அளவில் டெபாசிட் செய்ய முடியும். மொத்தத்தில் இதன் மூலம் வெவ்வேறு வகையான வட்டி விகிதங்களையும் பெற முடியும்.

ப்ளோட்டிங் விகிதத்தில் டெபாசிட் செய்யலாம்

இந்த டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் மாறும்போது, புதிய வட்டி விகிதத்தினை பெறலாம். இதன் மூலம் நீண்டகால நோக்கில் நீங்கள் நல்ல வருமானத்தினை பெறலாம். இதன் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் முடக்க தேவையில்லை.

பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ப்ளோட்டிங் விகிதத்தினை வழங்கி வருகின்றன. ஆக அதனை போன்ற திட்டங்களை பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக