அமைவிடம் :
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் சண்முகா நதிக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஆறுமுக விநாயகர் திருக்கோயில்.
மாவட்டம் :
அருள்மிகு ஆறுமுக விநாயகர் திருக்கோயில், சண்முகா நதிக்கரை, திண்டுக்கல்.
எப்படி செல்வது?
திண்டுக்கல்லிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
கோயில் சிறப்பு :
இங்குள்ள விநாயகர் ஆறுமுகங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
இத்தலத்தில் மூலவர் ஆறுமுக விநாயகர், தவிர சுந்தர விநாயகரும், ஆண்டித் திருக்கோலத்தில் முருகப்பெருமானும், காசிவிஸ்வநாதர் மற்றும் காளியம்மனும் அருள்பாலிக்கின்றனர்.
கோயிலுக்கு சற்று தள்ளி, தோகையடி விநாயகர் கோயில் உள்ளது. இங்கே புலிப்பாணி சித்தரும், போகரும் காட்சி தருகின்றனர்.
சிறிய ஆலயம்தான் என்றாலும் ஆறுமுகத்துடன் காட்சி தரும் விநாயகரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தபடி இருக்கின்றனர்.
ஆறுமுக விநாயகரை வணங்கினால் சகல ஞானங்களையும், யோகங்களையும் பெறலாம்.
சண்முகா நதியில் நீராடிவிட்டு, சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்குவது கூடுதல் சிறப்பையும், பலனையும் தரும்.
ஊற வைத்த பச்சரிசியுடன் வெல்லம், மிளகு, ஜீரகம் மற்றும் நல்லெண்ணெய் கலந்து படைத்தால், வியாபாரம் விருத்தியாகும். கல்வியில் மேன்மை பெறலாம்.
சூரனை வீழ்த்திவிட்டு, அந்த உக்கிரம் தணியாமல் கடும் கோபத்துடன் இருந்த முருகக் கடவுளின் உக்கிரத்தை தணிக்க ஆறுமுகங்களை காட்டியபடி எதிரே நின்றாராம் விநாயகர். அதைக் கண்ட கந்தனின் கடும் கோபம் முழுவதும் காணாமல் போனது. எனவே இங்கு ஆறுமுக விநாயகராக அருட்காட்சி தருகிறார்.
திருவிழா :
தைப்பூசம், ஆடி அமாவாசை, ஆடிப்பதினெட்டு, விநாயகர் சதுர்த்தி ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பிரார்த்தனை :
சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக