Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 14 பிப்ரவரி, 2022

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 54 சீன மொபைல் ஆப்-களை தடை செய்கிறது மத்திய அரசு

முன்னதாக கடந்த 2020 ஜூன் மாதம் டிக்டாக், யு.சி. பிரவுசர், ஷேர் இட், வீசாட் உள்ளிட்ட 59 பிரபலமான ஆப்கள் தடை செய்யப்பட்டன. 2020 நவம்பரில் 43 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மேலும் 54 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தடை விதிக்கப்படவுள்ள மொபைல் ஆப்களில், Beauty Camera, Sweet Selfie HD, Beauty Camera – Selfie Camera, Equalizer & Bass Booster, CamCard for SalesForce Ent, Isoland 2: Ashes of Time Lite, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Chess, Onmyoji Arena, AppLock, Dual Space Lite. ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 59-ன்கீழ், அவசர நிலையாக மத்திய அரசு ஆப்களை தடைசெய்ய உள்ளது. இந்த ஆப்கள், மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான டென்சென்ட், அலிபாபா உள்ளிட்டவைகளுக்கு சொந்தமானவை.

தடை செய்யப்படவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட ஆப்களை ப்ளாக் லிஸ்ட் செய்யுமாறு, ஆப் மற்றும் ப்ளே ஸ்டோர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆப்களை பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் திருடப்பட்டு அவை சீனா போன்ற நாடுகளின் சர்வர்களுக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் இந்தியர்களின் தனிஉரிமை பாதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னதாக கடந்த 2020 ஜூன் மாதம் டிக்டாக், யு.சி. பிரவுசர், ஷேர் இட், வீசாட் உள்ளிட்ட 59 பிரபலமான ஆப்கள் தடை செய்யப்பட்டன. 2020 நவம்பரில் 43 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2020 ஜூன் மாதத்திற்கு பின்னர் மொத்தம் 224 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் உயிரிழந்தவர்கள் குறித்த விபரம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சீன செயலிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக