Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 14 பிப்ரவரி, 2022

போட்டியாளரான GLANCE நிறுவனத்திடம் டிக் டாக்-ஐ விற்பனை செய்ய பேச்சுவார்த்தை?

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் டிக் டாக்-ஐ Glance நிறுவனத்திடம் விற்பனை செய்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறலை அடுத்து இந்திய ராணுவத்தினருக்கு சீனா ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் சீனாவுடனான இந்தியாவின் உறவு மோசமடைந்தது. இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி டிக் டாக், ஹலோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சீன மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் பணிபுரிந்து வரும் தனது பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக டிக் டாக் அறிவித்திருந்தது.

இதனிடையே டிக் டாக்கை பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அதன் போட்டியாளராக விளங்கும் Glance நிறுவனத்திடம் விற்பனை செய்ய டிக் டாக்-ன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முடிவு செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜப்பானின் Soft Bank வங்கி இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட அளவில் இருப்பதால் இது தொடர்பாக பைட் டான்ஸ், Glance நிறுவனங்கள் விளக்கம் அளிக்கவில்லை.

டிக் டாக் நிறுவனத்தை விற்பனை செய்யும் பேச்சுவார்த்தையை பைட் டான்ஸ் தொடர்ந்தால், டிக் டாக்கின் பயனாளர் தகவல்கள் இந்திய எல்லையை விட்டு செல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

Glance நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஹார்வர்ட் பிஸினஸ் பள்ளியில் படித்தவரான நவீன் திவாரி என்பவர் இதனை தொடங்கினார். Glance நிறுவனமானது நவீன் திவாரி தொடங்கிய InMobi நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இந்தியாவில் டிக் டாக் தடைக்கு பின்னர் Glance, Roposo செயலிகளில் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இவற்றின் பயனாளர்கள் எண்ணிக்கை 130 மில்லியனாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக