Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

5ஜி யூஸ் பண்ண தயாரா?- சோதனைக்கு ஜியோவுடன் இணையும் மொபைல் பிராண்டுகள்- மாஸ் பண்றாங்களே!

 ஏராளமான 5ஜி இயக்கப்பட்ட போன்கள் அறிமுகம்

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, குருகிராம், சண்டிகர், பெங்களூர் உள்ளிட்ட சில நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சோதனை தளங்களை நிறுவியுள்ளது. இதற்கு எந்தெந்த மொபைல் பிராண்டுகள் 5ஜி சோதனைக்கு ஜியோவுடன் இணைந்து செயல்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

ஏராளமான 5ஜி இயக்கப்பட்ட போன்கள் அறிமுகம்

இந்தியாவில் ஏராளமான 5ஜி இயக்கப்பட்ட போன்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், நிலையான 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்வதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. ஆனால் ரிலையன் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் 5ஜி சோதனை நடத்த தொலைத் தொடர்புத் துறை முன்னதாக அனுமதி வழங்கிவிட்டது. தொலைத்தொடர்பு துறை பல்வேறு நிறுவனங்களுக்கு சோதனை அலைக்கற்றையை ஒதுக்கி இருக்கிறது. ஜூலை மாதத்திற்குள் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்தாண்டில் 13 மெட்ரோ நகரங்கள் 5ஜி சேவை உறுதியாக கிடைக்கும் என குறிப்பிடப்படுகிறது.

5ஜி சோதனை தளங்கள்

அதில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, குருகிராம், சண்டிகர், பெங்களூர், அகமதாபாத், ஜாம்நகர், ஐதராபாத், புனே, காந்திநகர் மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் அடங்கும். ரிலையன்ஸ் ஜியோ இந்த நகரங்களில் 5ஜி சோதனை தளங்களை நிறுவி இருக்கிறது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர் இதுவரை 5ஜி சோதனைகளை நடத்துவதற்கு சில ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. 5ஜி சோதனைகள் நடத்துவதற்கு ஜியோ எந்தெந்த மொபைல் பிராண்டுகள் உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

சியோமியின் துணை பிராண்டான ரெட்மி

சியோமியின் துணை பிராண்டான ரெட்மி இந்தியா, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 5ஜி சோதனைகளை நடத்த ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டு சேர்ந்தது. நிறுவனங்கள் 5ஜி ஸ்டாண்டலோன் ஆய்வக சோதனையை நடத்தியதாகவும் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு காட்சிகள் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஆனது ஆய்வக சோதனைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதில் அதிக பதிவிறக்க வேகத்தை பெற்று ஸ்டார் ரேட்டிங்கை அடைந்துள்ளது. ஆனால் இந்த சோதனையின் முடிவில் அடைந்த வேகம் வெளிப்படுத்தப்படவில்லை. பயனர்களுக்கு அதிவேக 5ஜி மொபைல் அனுபவத்தை வழங்குவதில் ரெட்மி நோட் 11டி 5ஜி சாதகமானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சாதனம் SAஎன்1/ என்3/ என்5/ என்8/ என்28/ என்40/ என்78 மற்றும் NSA: என்1/ என்3/ என்40/ என்78 உள்ளிட்ட 7 பேண்டுகளுக்கான ஆதரவுடன் வருகிறது.

இன்ஃபினிக்ஸ் நிறுவனம்

அதேபோல் இன்ஃபினிக்ஸ் நிறுவனமும் தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான ஜியோவுடன் கைகோர்த்து உள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனான ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மெய்நிகர் ஆய்வக சோதனையின் ஒரு பகுதியாக, சாதனம் பல்வேறு காட்சிகள் மூலம் முழுமையாக சோதிக்கப்பட்டது. இதுகுறித்த கடுமையான சோதனைகளுக்கு பிறகு, பதிவிறக்கம் வேகத்தில் ஜீரோ 5ஜி சாதனம் நட்சத்திர முடிவுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. பயனர்களுக்கு நம்பகமான 5ஜி மொபைல் அனுபவத்தை கொண்டு வருவதில் ஸ்மார்ட்போனின் வேகம் மற்றும் திறன்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் 13 5ஜி பேண்டுகளை ஆதரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அது என்1/என்3/ என்5/ என்7/ என்8/ என்20/ என்28/ என்38/ என்40/ என்41/ என்77/ என்78 /என்79 மற்றும் NSA: என்41/ என்77/ என்78/ என்79 ஆகும். சாதனத்தால் ஆதரிக்கப்படும் பரந்த அளவிலான பட்டைகள் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட இணைப்பு மற்றும் செயல்திறனை உறுதியளிக்கிறது.

ஒப்போ 5ஜி சோதனை

ஒப்போ 5ஜி சோதனைகளுக்காக ஜியோவுடன் ஒத்துழைத்து செயல்படுகிறது. ஒப்போ ரெனோ 7 தொடருக்கான 5ஜி தனி நெட்வொர்க் சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ரெனோ 7 தொடருக்கான 5ஜி தனி நெட்வொர்க் சோதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ரெனோ 7 தொடரின் அதிவேக மற்றும் குறைந்த வேக 5ஜி சோதனை டெமோ அமைப்பின் மூலம் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த சோதனையில் 4கே வீடியோ ஸ்ட்ரீம்கள், அதிவேக பதிவேற்றங்கள் மற்றும் பதிவேற்றங்கள் ஆகியவற்றைக் காட்டியது.

ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன்

அதேபோல் ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 10 பேண்ட்கள் இணைப்பை ஆதரிக்கின்றன. அதேபோல் ரெனோ 7 சாதனம் 13 பேண்டுகள் வரை ஆதரிக்கின்றன. இதன் மூலம் நாட்டில் எங்கும் தடையில்லா 5ஜி நெட்வொர்க்கிற்கான அணுகலை வழங்குகிறது. 5ஜி இணைக்கப்பட் ரெனோ 7 தொடரின் ஜியோ 5ஜி சோதனை அமைப்பில் நல்ல செயல்திறனை காட்டியது என கூறப்படுகிறது. ஜியோவுக்கு ஒதுக்கப்பட்ட மிட் பேண்ட் சோதனை ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக