Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் திருநெல்வேலி

தினம் ஒரு திருத்தலம்... 16 திருக்கரங்கள்... உக்ர வடிவம்.!! - Seithipunal

இந்த கோயில் எங்கு உள்ளது?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

திருநெல்வேலியிலிருந்து மேற்கில் சுமார் 44 கி.மீ தொலைவில் பாவூர்சத்திரம் உள்ளது. இங்கிருந்து சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவில் கீழப்பாவூர் என்னும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ர வடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். இடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார்.

நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளார்.

நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகியோர் லட்சுமி நரசிம்மரை வணங்கியபடி நிற்கின்றனர். நரசிம்மரின் தலைக்குமேலே தர்மத்தை நிலைநாட்டும் வெண்கொற்றக்குடையும், இருபுறமும் வெண்சாமரமும் உள்ளன.

நரசிம்மப் பெருமாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

குடைவரை பாணியில் கருவறை மிகச்சிறியதாக உள்ளது.

வேறென்ன சிறப்பு?

வேளாண்மைப் பகுதியில் உள்ள இந்த கோயில் நரசிம்மரை வழிபடுவர்களுக்கு 1500 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம்.

ஆலயத்தின் முன்பகுதியில் கிழக்கு நோக்கிய சன்னதியில் அலர்மேல்மங்கை தாயார் சமேதராய் பிரசன்ன வெங்கடாஜலபதி வீற்றிருக்கிறார்.

ஆலயத்தின் முன்னுள்ள தீர்த்தம் நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு வந்து வழிபட்டு, திருப்பதியையும், அகோபிலத்தையும் ஒரு சேர தரிசித்த மன நிறைவு அடையலாம்.

இங்கே வெங்கடாஜலபதியையும், நரசிம்மரையும் தரிசிப்பவர்களுக்கு சிறப்பான வாழ்வு அமைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாள், பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

கடன்களிலிருந்து நிவாரணம் பெறவும், தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறவும் இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

நெய்தீபம் ஏற்றி நரசிம்மரை பதினாறு முறை வலம் வந்தும், பானகம் நிவேதனம் செய்தும் வழிபடுகின்றனர்.

நரசிம்மருக்குரிய நட்சத்திரமான சுவாதி நாளிலும், பிரதோஷத்திலும் இளநீர் மற்றும் பால் அபிஷேகம் நடக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக