Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

இன்கம்டாக்ஸ் ஆபீஸர் பார்த்த மருத்துவம்... எப்படி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

-----------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------------
மாமியார் : நேத்து பாத்த படத்துல சிரிச்சு சிரிச்சு பாதி உயிர் போய்டுச்சு...
மருமகள் : அப்படியா அத்தை... இன்னைக்கும் அந்த படத்துக்கு போய்ட்டு வாங்களேன்...
மாமியார் : 😠😠
-----------------------------------------------
மாலா : என்னடி உன் வீட்டுக்காரர் காதுல இவ்ளோ பெரிய கட்டு...
விமலா : நீ தானடி சொன்ன... தோசக்கல்லு வாங்கினத அவரு காதுல போட்டுவிடுனு...
மாலா : 😥😥
 -----------------------------------------------
கொய்யாப்பழம்...!!
-----------------------------------------------
கொய்யாப்பழம் கருவுறுதலை மேம்படுத்தும் ஃபோலேட்(குழடயவந) எனப்படும் கனிமச் சத்தினை கொண்டுள்ளது. 

கொய்யா அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. 

கொய்யா மர இலையை சாப்பிடுவது மிகச்சிறந்தது. கொய்யா இலைகளிலிருந்து வரும் சாறு பல் வலி, வீங்கிய ஈறுகள் மற்றும் வாய் வழி புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

கொய்யாப்பழத்தில் வைட்டமின் 'பி 3" மற்றும் வைட்டமின் 'பி 6" உள்ளது. இவை அறிவாற்றலின் செயல்பாட்டினையும், நரம்புகளுக்கு ஓய்வினையும் அளிக்கிறது.

கொய்யாப்பழம் ரத்தத்தில் அதிகம் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்திலுள்ள நச்சுக்களை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்கின்றது. 
----------------------------------------------- 
குறளும்... பொருளும்...!!
----------------------------------------------- 
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்

பொருள் :

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து நல்வழியில் அடங்கி வாழ்ந்தால் அவரது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவருக்குப் பெருமையைக் கொடுக்கும்.
----------------------------------------------- 
எங்கே எப்படி தட்டினால்... காசு விழும்?
-----------------------------------------------

பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடைய பையனோடு பதற்றமாக நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.

'என் மகன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னு தெரியல என்றாள்".

ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். 'நான்கு வாழைப்பழத்தை ஊட்டிவிடு, தானா வெளியே வந்துடும்" என்றார் ஒருவர்.

மற்றொருவர் 'ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்..." என்றார்.

கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனை தூக்கி குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார், பையன் விழுங்கிய காசு வெளியே வரவில்லை.

அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார். பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி ஒரு தட்டுத் தட்டினார். 

காசு வெளியே வந்து விழுந்தது, அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். 

அந்தப் பெண் நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.

'சார் நீங்க டாக்டருங்களா?" என்று அவரை பார்த்து அங்கிருந்த ஒருவர் கேட்டார்...

'இல்லை நான் இன்கம்டாக்ஸ் ஆபீஸர் என்றும், எங்கே எப்படி தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?" என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக