ஹை மைலேஜ் ஆயில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வயதாவது என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. வருடங்கள் உருண்டோடினால், நமது உடல் பாகங்கள் முன்பு வேலை செய்த அளவிற்கு சுறுசுறுப்பாக இயங்காது. மனிதர்களை போன்றுதான் கார்களும். வயதானால் கார்களின் பாகங்கள் சேதமடையும். எனவே பழைய கார்களின் பாகங்கள் 'ஸ்மூத்' ஆக இயங்க வேண்டுமென்றால் 'பூஸ்ட்' தேவை.
இங்குதான் ஹை மைலேஜ் ஆயிலின் (High Mileage Oil) உதவி காருக்கு தேவைப்படுகிறது. நமக்கு வயதானால் என்ன செய்வோம்? ஆரோக்கியமாக இருப்பதற்காக கூடுதல் அக்கறையுடன் இருப்போம் அல்லவா? அதை போலவே வயதான கார்களுக்கும் கூடுதல் பராமரிப்பு அவசியம். வாங்கி அதிக வருடங்கள் ஆன கார்களுக்கு நீங்கள் ஹை மைலேஜ் ஆயிலை வழங்கலாம்.
இதன் மூலம் வயது மூப்பின் காரணமாக காரில் ஏற்படும் தேய்மானங்களை குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்த முடியும். ஓகே. ஹை மைலேஜ் ஆயிலை பயன்படுத்த தொடங்கும் நேரம் எது? என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு வந்திருக்கலாம். 1 லட்சம் அல்லது அதற்கும் மேலான கிலோ மீட்டர்கள் ஓடிய கார்களுக்கு ஹை மைலேஜ் ஆயிலை பயன்படுத்தலாம்.
அதிக கிலோ மீட்டர்கள் ஓடிய வாகனங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வாக ஹை மைலேஜ் ஆயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய வாகனங்களின் இன்ஜின்கள் புகையை கக்கும். உமிழ்வு அதிகமாக இருக்கும். அத்துடன் எரிபொருளையும் குடிக்கும். ஆனால் இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் ஹை மைலேஜ் ஆயில் நல்ல தீர்வு.
ஏனெனில் எரிபொருள் நுகர்வை ஹை மைலேஜ் ஆயிலை குறைக்கிறது. எனவே எரிபொருளுக்காக நீங்கள் செலவிடும் தொகை கட்டுக்குள் இருக்கும். அத்துடன் உமிழ்வை குறைப்பதற்கும் ஹை மைலேஜ் ஆயில் பயன்படுகிறது. மேலும் பழைய வாகனங்களில் கசிவுகளை கட்டுப்படுத்துவதில் ஹை மைலேஜ் ஆயில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் ஹை மைலேஜ் ஆயில் சக்தி வாய்ந்த மல்டி விட்டமினை போல் செயல்படுகிறது. தேய்மானம் அடைந்த இன்ஜின் பாகங்களை இது மீட்டெடுக்கிறது. அத்துடன் மேலும் தேய்மானம் ஏற்படுவதை தடுக்கிறது. பொதுவாக பழைய வாகனங்கள் இன்ஜினில் ஏற்படும் பிரச்னையால் அடிக்கடி பழுதாகி நின்று விடும்.
ஆனால் ஹை மைலேஜ் ஆயில் மூலம் இதுபோன்ற பிரச்னைகளை குறைக்கலாம். ஹை மைலேஜ் ஆயிலானது, பல்வேறு ஆண்டிஆக்ஸிடண்ட்கள் (Antioxidants) மற்றும் டிடர்ஜெண்ட்கள் (Detergents) போன்றவற்றை கொண்டிருக்கும். இதன் மூலம் தேய்மானம் மற்றும் உராய்வை ஹை மைலேஜ் ஆயில் குறைக்கிறது.
பழைய காரின் இன்ஜின்களுக்கு இது சாதகமான அம்சம். காலப்போக்கில் உருவாகும் அழுக்கு மற்றும் கசடுகளை இந்த பொருட்கள் சுத்தம் செய்கின்றன. அதே நேரத்தில் உராய்வையும் குறைக்கின்றன. இதன் மூலமாக உங்கள் பழைய காரின் இன்ஜின் முன்பை காட்டிலும் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் ஏற்கனவே கூறியபடி 1 லட்சம் அல்லது அதற்கும் மேலான கிலோ மீட்டர்கள் ஓடிய கார்கள் ஹை மைலேஜ் ஆயில் மூலமாக பயன் அடையலாம். ஒருவேளை எனது கார் பழையதுதான். ஆனால் இதை விட குறைவான கிலோ மீட்டர்கள்தான் ஓடியுள்ளது. அப்படியானால் ஹை மைலேஜ் ஆயிலை பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
நிச்சயமாக பயன்படுத்தலாம் என்பதுதான் இந்த கேள்விக்கு பதில். ஏனெனில் உங்களுடையது பழைய கார் என்பதால் காலப்போக்கில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே கிலோ மீட்டர்களை பொருட்படுத்தாமல், பழைய கார் என்றாலே ஹை மைலேஜ் ஆயிலை பயன்படுத்தி பலன் அடைய முடியும்.
உங்கள் கார் பழையது என்றால் இனிமேல் ஹை மைலேஜ் ஆயிலை தயங்காமல் பயன்படுத்துங்கள். இந்த தகவல்கள் உங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் தெரிந்தவர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள். இதன் மூலம் அவர்களும் பயனடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக