Google Account | கூகுள் அக்கவுண்டை பொறுத்தவரை உங்களைப் பற்றி பிறர் என்ன மாதிரியான தகவல்களை மட்டும் பார்க்கவேண்டும் என நீங்கள் கட்டுப்படுத்த முடியும். ஆம், உங்களுடைய சுயவிவரங்கள் சிலவற்றை தனிப்பட்டதாக மாற்றிக்கொள்ள முடியும்.
கூகுள் அக்கவுண்டை பொறுத்தவரை உங்களைப் பற்றி பிறர் என்ன மாதிரியான தகவல்களை மட்டும் பார்க்கவேண்டும் என நீங்கள் கட்டுப்படுத்த முடியும். ஆம், உங்களுடைய சுயவிவரங்கள் சிலவற்றை தனிப்பட்டதாக மாற்றிக்கொள்ள முடியும். பிறரிடம் நீங்கள் காட்ட விரும்பாத உங்கள் பிறந்த நாள், பாலினம், வேலை, நீங்கள் பணிபுரியும் இடம், வசிப்பிடம் மற்றும் பணியிட தொடர்பான தகவல், கல்வி போன்றவை அடங்கும். உங்கள் அனைத்து சுயவிவரங்களையும் மறைத்து, பிறர் பார்க்காத வண்ணம் பாதுகாக்க நினைக்கிறீர்களா? சரி, அதை எப்படி செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
ஆண்ட்ராய்டு போனில் சுயவிவரங்களை சேர்ப்பது, நீக்குவது, மாற்றுவது எப்படி?
1. உங்களுடைய சுய விவரங்களை மறைக்க விரும்பினால், ஆண்ட்ராய்டு செல்போனில் settings app-யை க்ளிக் செய்யவும். அதில் ‘கூகுள்’ என்பதை க்ளிக் செய்தால், தொடர்ந்து ‘கூகுள் அக்கவுண்ட்’ என்பது ஓபன் ஆகும்.
2. அதன் மேல்புறத்தில் உள்ள சுயவிவரங்கள் ( Private Information) என்பதை க்ளிக் செய்யவும்.
3. அதில் ‘என்னைப்பற்றி’ (About Me ) என்பதை க்ளிக் செய்து அதிலிருந்து "Choose what others see" என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
4. Change your details ஓபன் ஆகும்.
சேர் (Add) - நீங்கள் ஏதாவது புதிய விவரங்களை சேர்க்க விரும்பினால் Add-யை க்ளிக் செய்யலாம்.
திருத்து (Edit) - நீங்கள் ஏதாவது ஒரு விவரத்தை மாற்ற அல்லது திருத்த விரும்பினால் Edit-யை க்ளிக் செய்யலாம்.
(Tips - சமீபத்தில் தான் உங்களுடைய Profile name -யை மாற்றி இருக்கிறீர்கள் என்றால், மீண்டும் அதனை மாற்ற சிறிது காலம் காத்திருக்க வேண்டும்)
நீக்கு (Remove) - நீங்கள் நீக்க விரும்பும் தகவலை க்ளிக் செய்து, Remove பட்டனை தட்டினால் அதனை நீக்கலாம்.
இப்போது உங்களுடைய மொபைல் ஸ்கிரீனில் தோன்றும் ஸ்டெப்களை அடுத்தடுத்து பாலோப் செய்யுங்கள்.
சுயவிவரங்களை கட்டுப்படுத்துவது எப்படி?
கூகுள் அக்கவுண்ட்டை பயன்படுத்தும் பிறரும் உங்களுடைய முகப்பு படம் மற்றும் பெயர் போன்ற சுயவிவரங்களை பார்க்க முடியும். உங்களது தனிப்பட்ட தகவல்களில் எதை பிறர் பார்க்கலாம் என்பதை நீங்கள் தேர்வு செய்ய முடியும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றுங்கள்.
1. முதலில் செட்டிங் (Setting)-யை திறக்கவும். அதில் Google என்பதை டேப் செய்தால், உங்கள் Google கணக்கு மற்றும் சுயவிவரங்களுக்கு செல்லலாம்.
2. ‘மற்றவர்கள் பார்ப்பதை தேர்வு செய்க’ ("Choose what others see") என்பதை க்ளிக் செய்யவும்.
3. அதில் Information என்பதை தேர்வு செய்தால், உங்களுடைய சுயவிவரங்களை யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம்.
4. சுயவிவரங்களை தனிப்பட்டதாக்க ‘நீங்கள் மட்டும்’ (only me) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள், பின்னர் edit-யை தேர்வு செய்து சுயவிவரங்களை யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
5. உங்களது சுயவிவரங்களை அனைவரும் பார்ப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்றால் 'Anyone People' என்பதை க்ளிக் செய்தால் போதும்.
கூகுள் சேவைகளில் சுயவிவரங்களை நிர்வாகிப்பது, பார்ப்பது எப்படி?
1. உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் அல்லது டேப்லெட்டில், உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
2. அதற்கு மேலே Personal info என்பதை க்ளிக் செய்யவும்.
3. "உங்கள் சுயவிவரங்கள்" என்பதற்குச் செல்லவும். அதில் உங்களுடைய கூகுள் சேவைகளுக்காக ப்ரோபைல்கள் காணப்படும்.
4. அதில் சுயவிவரங்களை பார்க்க view என்பதையும், தகவல்களை நிர்வகிக்க manage your profile info என்பதையும் தேர்வு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக