சமையல் கலை மற்றும் விதவிதமான உணவு வகைகளை மையப்படுத்தி உலகம் முழுவதும் பல முன்னணி சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. அதேபோல் யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் உணவுக்காக வரவேற்பு எப்போதும் டாப் தான்.
இந்நிலையில் உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி இந்தியாவில் அறிமுகம் ஆனது. சன் டிவி-யில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ‘மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. உலகின் 40 நாடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாஸ்டர் செஃப்’ தமிழில் ஒளிபரப்பானது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்கு வின்னி, நித்யா, தேவகி மற்றும் கிருத்திகா என 4 பேர் சென்றார்கள். இதில் தேவகி மாஸ்டர் செஃப் பட்டத்தை வென்றார் தேவகி. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
அதாவது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை திருப்பி அளிப்பதாக மாஸ்டர் செஃப் குழுவினர் தரப்பில் வாக்குறுதி தரப்பட்டிருந்ததாம். ஆனால் அவர்கள் சொன்னபடி இன்னும் தரவில்லையாம். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் சமூக வலைதளங்களில் இதை தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக