Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

காஷ்மீர் சர்ச்சை: மன்னிப்பு கோரிய KFC, Pizza Hut நிறுவனங்கள்..

 KFC
KFC | இந்தியாவில் பெங்களூருவில் 1995 ஆம் ஆண்டு முதன்முறையாக கே.எப்.சி. நிறுவனம் தனது கிளையை தொடங்கியது. இதன் மூலம் இந்திய வர்த்தகத்தில் நுழைந்தது.

காஷ்மீரை மையமாக கொண்டு பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளது. பொதுவாக மக்களினால் ஏற்பட கூடிய சர்ச்சைகள் தான் அதிகம் இருந்து வந்தது. இருப்பினும் சில சமயங்களில் மிக பெரிய நிறுவனங்களினாலும் பல்வேறு சர்ச்சைகள் உருவாகி வருகிறது. இப்படியொரு சர்ச்சைக்குரிய விஷயம் தான் தற்போது நடந்துள்ளது. கே.எப்.சி. உணவு நிறுவனம் தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.

விரைவு உணவக பாணியிலான கடைகளின் தன்மையை கொண்டவை தான் கே.எப்.சி., பீட்சா ஹட், போன்ற உணவகங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் அமெரிக்காவை சேர்ந்தவை. இவற்றின் கிளைகள் உலகெங்களிலும் உள்ளது. இந்தியாவில் பெங்களூருவில் 1995 ஆம் ஆண்டு முதன்முறையாக கே.எப்.சி. நிறுவனம் தனது கிளையை தொடங்கியது. இதன் மூலம் இந்திய வர்த்தகத்தில் நுழைந்தது.

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் யம் பிராண்ட்ஸ் என்கிற நிறுவனம் தான் பீட்சா ஹட் மற்றும் டேக்கோ பெல் ஆகிய பிரபல பிராண்டுகளையும் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக கே.எப்.சி. செயல்பட்டு வருகிறது. சுமார் 450 கே.எப்.சி. கிளைகள் இந்தியாவில் உள்ளது. கே.எப்.சி. நிறுவனம் இதற்கு முன்னரே சில சமயங்களில் அதன் உணவு தரம் குறித்த சர்ச்சைகளில் சிக்கி உள்ளது.

இம்முறை பிரிவினை சார்ந்த ஒரு சர்ச்சையில் தான் சிக்கி உள்ளது. கே.எப்.சி. நிறுவனத்தின் சமூக ஊடக கணக்கு ஒன்றில் காஷ்மீர், காஷ்மீரிகளுக்கே சொந்தம் என்கிற சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. இது இந்தியாவில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்த கூடிய வகையிலான பதிவு என்று பலர் கருத்து கூற தொடங்கினர். அடுத்து இதற்கு பலத்த எதிர்ப்பு குரலும் கிளம்பியது.

இது குறித்து கே.எப்.சி. நிறுவனம் சில நாட்கள் எதுவும் பேசாமல் இருந்து வந்தது. தற்போது தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரும் விதமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. இந்த ட்விட்டர் பதிவில், 'இந்தியாவிற்கு வெளியே இயங்க கூடிய சில கே.எப்.சி. கிளைகள் தனது சமூக ஊடக பதிவில் வெளியிட்ட செய்திக்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இந்தியாவை நாங்கள் மதிக்கிறோம், மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க விரும்புகிறோம். அனைத்து இந்தியர்களுக்கும் எங்கள் சேவையை பெருமையுடன் செய்வதற்கான முனைப்பில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக செயல்பட இருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

We deeply apologize for a post that was published on some KFC social media channels outside the country. We honour and respect India, and remain steadfast in our commitment to serving all Indians with pride.

— KFC India (@KFC_India) February 7, 2022

இதே போன்ற சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பீட்சா ஹட் நிறுவனமும் செய்திருந்தது. 'நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம்.' என்று தனது அதிகார பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இந்த பதிவும் சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதே போன்று நெட்டிசன்கள் '#BoycottPizzaHut' என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்தனர். தற்போது கே. எப்.சி விவகாரத்தில் #BoycottKFC என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக