ஐபோன் மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஐபோன்கள் தனித்துவமான இயங்குதளம், தரமான சிப்செட், சிறந்த கேமரா வசதி என பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பை பெறுகிறது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிளுக்கு நெதர்லாந்து நாடு மூன்றாவது முறையாக அபராதம் விதித்துள்ளது. நெதர்லாந்து நாடடில் ஆப்பிள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் குறித்த விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டு போன்கள் பல்வேறு அம்சங்களோடு கண்ணை கவரும் வடிவமைப்பில் ஏணைய நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இருப்பினும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விட ஐபோன்களுக்கு உலகளவில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. காரணம் தனித்துவமான சிப்செட், சிறந்த பாதுகாப்பு, தனி ஓஎஸ் என பல்வேறு தனித்துவ அம்சங்களை ஐபோன் கொண்டிருக்கிறது. ஐபோன் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகவே இருக்கிறது. பிரபலமான அமெரிக்க நிறுவனங்களில் பிரதான ஒன்று ஆப்பிள். பிரபல ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒரே நாட்டில் மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
ஆப்பிள் ஸ்டோரில் சில டேட்டிங் அப்ளிகேஷன்
ஆப்பிள் ஸ்டோரில் சில டேட்டிங் அப்ளிகேஷன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த டேட்டிங் அப்ளிகேஷனில் ஆப்பிள் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்படாத சில ஆன்லைன் பேமெண்ட் பயன்பாடுகள் மூலம் மக்கள் பணம் செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட பேமெண்ட் பயன்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக நெதர்லாந்து நாட்டின் கண்காணிப்புக் குழு மூன்றாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த ஜனவரி மாதம் நெதர்லாந்து நாட்டின நுகர்வோர் மற்றும் சந்தை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்துக்கு 5 மில்லியன் டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அதேபோல் நெதர்லாந்து நாட்டின் நீதிமன்றங்கள், ஆப்பிள் நிறுவனம் நாட்டின் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக தெரிவித்தது. நெதர்லாந்து அரசின் விதிமுறைகளுக்கு ஆப்பிள் நிறுவனம் அதன் இணைய பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தது.
இருப்பினும்
ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஏமாற்று அளித்து வருவதாக
நுகர்வோர் மற்றும் சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போதைய
விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவனம் முறையான விளக்கம் அளிக்க
தவறவிட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
டிஜிட்டல் ஆன்லைன்
பேமெண்ட் தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஏணைய சட்ட சிக்கலை சந்தித்து வருகிறது.
முன்னதாக அமெரிக்க செனட் சபை ஆப்பிள் நிறுவனம் பேமெண்ட் நிறுவனங்களிடம்
இருந்து பெறப்படும் கமிஷன் குறித்து கேள்வி எழுப்பி இருந்தது.
அதோடுமட்டுமின்றி இதுதொடர்பான மசோதாவும் அந்நாட்டு செனட் சபையில்
நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் மற்றும் சந்தைகளுக்கான ஆணையம் (ஏசிஎம்) ஜனவரி 24 முதல் ஆப்பிள் நிறுவனத்திற்கு வாரந்தோறும் 5 மில்லியன் யூரோ (சுமார் ரூ.42 கோடி) அபராதம் வாரந்தோறும் விதித்து வருகிறது. அமெரிக்க செனட் இயற்றப்பட்ட மசோதாவுக்கு பிறகு, ஆப்பிள் பல நாடுகளில் ஆப்ஸ்-இன்-ஆப் பர்ச்சேஸ்களில் வசூலிக்கும் கமிஷன்கள் தொடர்பாக பல அழுத்தங்களை சந்தித்து வருகிறது.
நெதர்லாந்து அரசின் வலியுறுத்தலுக்கு ஆப்பிள் தற்போது வரை மாற்றங்களை செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பிப்.,3 ஆம் தேதி ஆப்பிள் தனது வலைப்பதிவில் இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில் மாற்றுக் கட்டண முறைகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை தெளிவாக விளக்கியது. மேலும் அதில் ஏசிஎம் ஆர்டருக்கு இணங்க கமிஷன் வசூலிப்பதாகவும் ஆப்பிள் குறிப்பிட்டது. இதுகுறித்து ஏசிஎம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஏஜென்சி ஆப்பிளின் மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் பதிலளிக்கும் எனவும் தெரிவித்தது.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஐபோன் 12 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனங்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன. இந்நிலையில் ஐபோன் 12 பாக்ஸில் அந்த போனுக்கான சார்ஜரை வைக்கத் தவறியதால் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.14 கோடி ரூபாய் அபராதம் விதித்தது பிரேசில் நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு மையம். ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, Procon-SP எனப்படும் நுகர்வோர் பாதுகாப்பு முகமை தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த அபராதத்தை போட்டுள்ளது. குறிப்பாக தவறான விளம்பரம் மற்றும் சார்ஜரை வைக்கமால் போனை விற்பனை செய்தது தவறு என சொல்லி இந்த அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்ஜர் வைக்காததால் அதன் விலையில் மாற்றம் உள்ளதா?
பிரேசில் நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டத் திட்டங்களை பின்பற்றி வருவதை ஆப்பிள் நிறுவனம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மேலும் ஐபோன் 12-ல் சார்ஜர் வைக்காததால் அதன் விலையில் மாற்றம் உள்ளதா? என்ற கேள்விக்கும் ஆப்பிள் நிறுவனம் பதில் அளிக்கவில்லை என அந்த முகமை தெரிவித்தது. குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ஐபோன் 12 சாதனங்களில் சார்ஜர் மற்றும் ஹெட்போன் இருக்காது என சொல்லியிருந்தது. பின்பு மின் கழிவுகளை குறைக்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்த நடைமுறையை கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக