Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 பிப்ரவரி, 2022

சூப்பர்... எலெக்ட்ரிக் வண்டி வாங்கறதுக்கு கவர்மெண்ட்ல இவ்ளோ அமௌண்ட் தர்றாங்களா? மக்கள் உற்சாகம்!

 சூப்பர்... எலெக்ட்ரிக் வண்டி வாங்கறதுக்கு கவர்மெண்ட்ல இவ்ளோ அமௌண்ட் தர்றாங்களா? மக்கள் உற்சாகம்!


எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க முடியும் என்பதால் மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம் என்பதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று.

மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் வழங்கி வருகிறது. இதேபோல் பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை வழங்கி கொண்டுள்ளன. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பது அரசுகளின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த சூழலில் ஒடிசா மாநில அரசும், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு 15 சதவீதம் மானியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விலையில் 15 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக பெறலாம்.

அதே நேரத்தில் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான 15 சதவீத மானிய உச்ச வரம்பானது 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த மானிய தொகை 50 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2021-ன் ஒரு பகுதியாக மானியம் வழங்கப்படவுள்ளது. வாகனம் எந்த ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதோ அந்த ஆர்டிஓ மூலமாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு மானிய தொகை அனுப்பி வைக்கப்படும். வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒடிசா மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை வழங்குவது இது முதல் முறை கிடையாது. முன்னதாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் மோட்டர் வாகன வரிகளில் இருந்தும் ஒடிசா மாநில அரசு விலக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதுதொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா மாநில அரசின் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் தயங்குவதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம் என்பதும் ஒரு காரணம்.

ஆனால் மானியம், பதிவு கட்டணம் மற்றும் வரிகளில் இருந்து விலக்கு போன்ற காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களின் ஆன் ரோடு விலை ஓரளவிற்கு குறைந்து விடுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது மக்களுக்கு சுமையாக இல்லாமல் எளிமையாக இருக்கும். ஒடிசாவை போல் இன்னும் பல்வேறு மாநில அரசுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது சிஎன்ஜி வாகனங்களும் தற்போது இந்தியாவில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டு வந்தது.

டிகோர் சிஎன்ஜி மற்றும் டியாகோ சிஎன்ஜி ஆகிய சிஎன்ஜி கார்கள்தான் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் பல்வேறு சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா தவிர இன்னும் பல்வேறு நிறுவனங்களும் தற்போது மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் மீது தங்களின் கவனத்தை திருப்பி வருகின்றன. எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி ஆகிய தொழில்நுட்பங்களைதான் பல்வேறு நிறுவனங்களும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. எனவே வரும் காலங்களில் இத்தகைய வாகனங்களை சாலைகளில் அதிகளவு காண முடியும்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக