அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.2999 மற்றும் ரூ.299 விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் பிவி2399 திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது. இந்த திட்டத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் 60 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பிவி2399 திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது. இந்த திட்டம் இதுவரை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் மார்ச் 31 2022 வரையில் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது விளம்பரச் சலுகையாக கூடுதல் 60 நாட்கள் வேலிடிட்டி சலுகையை வழங்குகிறது.
அதேபோல் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ரூ.2999 மற்றும் ரூ.299 என்ற விலையில் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல் தற்போது அறிமுகம் செய்துள்ள இரண்டு திட்டங்களும் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பிப்ரவரி 1 2022 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பிவி ரூ.2999 திட்டமானது 365 நாட்கள் மற்றும் கூடுதல் 90 நாட்கள் வேலிடிட்டி சலுகையோடு கிடைக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பிவி ரூ.2999 திட்டமானது 365 நாட்கள் மற்றும் கூடுதல் 90 நாட்கள் வேலிடிட்டி சலுகையோடு கிடைக்கிறது. இந்த கூடுதல் 90 நாட்கள் வேலிடிட்டியானது மார்ச் 31, 2022 வரை விளம்பரச் சலுகையாக கிடைக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளோடு வழங்குகிறது. தினசரி இணைய வரம்பு வேகம் முடிந்த உடன் இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விளம்பரச் சலுகை மூலம் ரீசார்ஜ் செய்யும் போது 455 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ரூ.299 விலையில் ரீசார்ஜ் செய்யும் போது தினசரி 3 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளோடு வழங்குகிறது. தினசரி இணைய வரம்பு வேகம் முடிந்த உடன் இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. குறைந்த செலவில் நீண்ட காலத்திற்கு அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பினால் இது சிறந்த தேர்வாகும். 3ஜி சேவையை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு சிறந்த திட்டமாகும். இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 31, 2022 வரை ரீசார்ஜ் செய்யும் போது விளம்பரச் சலுகையாக கூடுதல் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ரூ.2399 திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளும் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியோடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இலவச ஈரோஸ் நவ் சேவை வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டேட்டா மறறும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது. ஆனால் இந்த திட்டத்தில் 22 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 0.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள்எதுவும் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் இலவச PRBT சேவையை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக