இந்திய டெலிகாம் பயனர்கள் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். இன்னும் பெரும்பாலான மக்கள் மலிவு விலையில் கிடைக்கக் கூடிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களையே விரும்புகிறார்கள். இவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு இரு கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்கள் தன் வசம் வைத்துள்ளன. அந்த வரிசையில் ஏர்டெல் பயனர்களுக்குக் கிடைக்கக் கூடிய கம்மி விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம். உங்கள் கையில் வெறும் 50 ரூபாய் மட்டும் இருந்தால், அதற்கேற்ப ஏதேனும் ரீசார்ஜ் திட்டம் உள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்திடம் இருந்து கிடைக்கக் கூட கம்மி விலை சிறந்த திட்டம் என்றால், அது உங்களுக்கு வெறும் ரூ. 99 என்ற விலையில் கிடைக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ப்ரீபெய்டு கட்டண உயர்வுக்குப் பிறகு ரூ. 79 திட்டத்தின் விலை இப்போது ரூ. 99 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 200 எம்பி டேட்டா நன்மை, ரூ. 99 மதிப்புள்ள டாக்டைம் நன்மை, கட்டண அழைப்பு நன்மை, ஒரு அழைப்பிற்கு ஒரு நொடிக்கு 1 பைசா என்ற கட்டணம் வசூலிக்கப்படும்.
அதேபோல், உள்ளூர் எஸ்எம்எஸ் ஒன்றிற்கு ரூ. 1 என்ற கட்டணமும், எஸ்டிடி எஸ்எம்எஸ் ஒன்றிற்கு ரூ 1.5 என்ற கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த கம்மி விலை ரீசார்ஜ் திட்டமான ரூ. 99 திட்டம் மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவு விலையிலான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாகும் என்பது கவனிக்கத்தக்கது. இது வாய்ஸ் கால் அழைப்பு மற்றும் டேட்டாவுடன் கூடிய SMS நன்மைகளுடன் வருகிறது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் வெறும் 50 ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு ரீசார்ஜ் செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு இப்போதைய பதில் 'இல்லை' அல்லது 'முடியாது' என்பதே உண்மையான பதிலாகும். ஆனால், சில காலங்களுக்கு முன்னர் ஏர்டெல் நிறுவனம் வெறும் ரூ. 49 விலையில் கூட ரீசார்ஜ் திட்டங்களை வழங்கியது என்பதை நாம் மறக்க முடியாது. இப்போதைய சூழ்நிலையில், ரூ. 50 விலைக்குள் ரீசார்ஜ் செய்ய முடியாது என்றாலும் கூட உங்களால் டேட்டா வவுச்சர்களைப் பெற முடியும் என்பதே உண்மை.
டேட்டா வவுச்சர்களை வாங்க முயன்றாலும் கூட, உங்களிடம் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் செயல்பாட்டில் இருக்கும்போது மட்டுமே டேட்டா வவுச்சர்கள் வேலை செய்யும் என்பதை மறக்க வேண்டாம். ஏர்டெல் டேட்டா வவுச்சர்கள் ரூ. 58 விலை முதல் தொடங்குகின்றன, இது பயனர்களுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்னர் ரூ. 98 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு Wynk Music Premium நன்மையுடன் 5ஜிபி டேட்டா நன்மையையும் வழங்குகிறது. இரண்டு திட்டங்களின் செல்லுபடியாகும் வேலிடிட்டி உங்களின் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி உடன் மட்டும் பொருத்தும்.
எனவே கம்மி விலை திட்டங்கள் என்று பொதுவாக நாம் பார்க்கும் பட்சத்தில், டேட்டா வவுச்சர்களையும் இணைக்க வேண்டும் என்றால், இந்த 2022 ஆம் ஆண்டிற்கான ஏர்டெல்லின் மிகக் குறைந்த ரீசார்ஜ் திட்டம் என்றால் அது நிச்சயமாக இந்த ரூ. 58 திட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சரி, ஏர்டெல் நிறுவனம் முன்னர் வழங்கிய ரூ. 49 திட்டத்தின் நிலை என்ன ஆனது? அந்த திட்டம் உண்மையிலேயே நீக்கப்பட்டதா என்ற கேள்வியும் சில காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கான உண்மை காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
ஆம், ஏர்டெல்லின் ரூ.49 பேக் 2021 இல் அகற்றப்பட்டது. டெல்கோ ரூ.49 திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தியது. இதனால், பயனர்கள் அடுத்த மலிவான ரீசார்ஜ் திட்டத்தின் மாற்றாக ரூ. 79 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். ஏர்டெல் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்க விரும்புகிறது, எனவே ஒரே நேரத்தில் அனைத்து திட்டங்களின் விலைகளையும் திறம்பட உயர்த்தாமல் இப்படி மாற்றம் செய்வது நிறுவனத்தின் ஒரு வழியாகும். பழைய ரூ. 49 அடிப்படைத் திட்டப் பயனர்கள் புதிய ரூ. 79 அடிப்படைத் திட்டத்திற்கு மாற வேண்டியிருந்தது. இது ஒரு பயனருக்குச் சராசரி வருவாயை அதிகரிக்க ஏர்டெல்லுக்கு உதவியது.
இதன் காரணமாக ஏர்டெல் முன்பு வழங்கு வந்த மிகவும் மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ. 49 திட்டம் நிறுத்தப்பட்டது. எனவே முந்தைய ஏர்டெல் குறைந்த ரீசார்ஜ் திட்டமான ரூ.49 திட்டத்தைப் பயனர்கள் பல மாதங்களாக டெல்கோவின் சலுகைகளில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விலை உயர்வுக்குப் பின்னர் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மலிவான திட்டம் என்றால், அது டாக் டைம் மட்டும் கிடைக்கும் ரூ. 10, ரூ. 20 ஆகிய திட்டங்களாக மட்டுமே இருக்கும். இந்த திட்டங்களில் வேலிடிட்டி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் அடிப்படை ரீசார்ஜ் மீது டாக் டைம் நன்மையை மட்டும் அதிகரிக்கக்கூடியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக