கூகுள் நிறுவனம் தீங்கிழைக்கும் ஆப் வசதிகளை அவ்வப்போது நீக்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக பாதுகாப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது கூகுள் நிறுவனம். இந்நிலையில் மால்வேரால் பாதிக்கப்பட்ட டூ-ஃபேக்டர் ஆதன்டிகேஷன் எனும் ஆப் வசதியை நீக்கியுள்ளது கூகுள்.
குறிப்பாக
டூ-ஃபேக்டர் ஆத்தன்டிகேஷன் ஆப்( Two-Factor Authentication App) வசதியானது
அக்கவுண்ட்களை ஆன்லைனில் பாதுகாக்க சிறந்த வழியாக கருதப்பட்டுவந்தது.
ஆனால் இந்த ஆப் வசதியானது வங்கி சார்ந்த தகவல்களை திருடும் என்று தகவல்
வந்ததால், கூகுள் நிறுவனம் இதை
நீக்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் இதை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு முன்பு 10,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த ஆப் வசதியை யாராவது தங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்.
அதேபோல் கூகுள் நிறுவனம் ஆபத்தான மால்வேர் ஆப்ஸ்களை நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஆப் வசதிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறது. ஆனாலும் பல ஆண்டுகளாக, மோசடி செய்பவர்கள் தங்களின் செயலிகள் ஆப் ஸ்டோரில் இடம்பெற கூகுள் நிறுவனம் வைத்திருக்கும் சோதனைகள் மற்றும் தேவைகளை புரிந்துகொண்டு புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து ஏமாற்றி வந்தனர், ஆனால் கூகுள் நிறுவனம் மெல்ல மெல்ல தீங்கிழைக்கும் செயலிகளை நீக்கி வருகிறது என்று தான் கூறவேண்டும்.
மேலும் கடந்த ஆண்டு இறுதியில் மால்வேர் அலர்ட் காரணமாக பிளே ஸ்டோரிலிருந்து ஏழு அப்ளிகேஷன்களை நீக்கியதுகூகுள் நிறுவனம். காஸ்பர்ஸ்கி நிபுணர் ஒருவர் பிளே ஸ்டோரில் சில அப்ளிகேஷனில் மால்வேர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
குறிப்பாக காஸ்பர்ஸ்கி நிபுணர், பயனர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த அப்ளிகேஷன் குறித்து விவரங்களையும் சொல்லி இருந்தார். அதன் பேரில் கூகுள் நிறுவனம் அந்த அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கூகுள் நிறுவனம் நீக்கிய அந்த அப்ளிகேஷன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
1.QRcode Scan - QR கோட் ஸ்கேன்
2.EmojiOne Keyboard - எமோஜி ஒன் கீபோர்ட்
3.Battery Charging Animations Battery Wallpaper - பேட்டரி சார்ஜிங் அனிமேஷன்கள் பேட்டரி வால்பேப்பர்
4.Dazzling Keyboard - Dazzling கீபோர்டு
5.Volume Booster Louder Sound Equalizer -வால்யூம் பூஸ்டர் லவுட் சவுண்ட் ஈக்வலைசர்
6.Super Hero-Effect - சூப்பர் ஹீரோ எஃபெக்ட்
7.Classic Emoji Keyboard - கிளாசிக் எமோஜி கீபோர்ட்
குறிப்பாக
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன்களை முன்னதாகவே இன்ஸ்டால்
செய்துள்ள பயனர்கள் உடனடியாக நீக்க வேண்டும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இலவசமாக உங்களுக்கு ஏதேனும் ஒரு முக்கிய
சேவை கிடைக்கிறது என்றால் ஒரு முறைக்கு இரண்டு முறையாவது
யோசித்துக்கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைக்கும் எந்த ஒரு சேவைக்குப்
பின்னணியில் ஏதேனும் ஒரு லாபகரமான செயல்பாட்டை அந்த ஆப்ஸ்கள் உங்களுக்குத்
தெரியாமல் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை மறக்காதீர்கள்.
குறிப்பாக இப்போது வரும் ஒரு சில ஆப் வசதிகள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது நமது தினசரி வேலைகளை செய்ய சில ஆப் வசதிகள் மிகவும் அருமையாக பயன்படுகின்றன. ஆனாலும் ஒரு சில ஆப் வசதிகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில ஆப் வசதிகள் நமது எஸ்எம்எஸ், ஓடிபி, அழைப்புகள் போன்றவற்றை திருடும் வகையில் வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது தீங்கிழைக்கும் ஆப் வசதிகளை நீக்கிய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக