Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 பிப்ரவரி, 2022

வேற லெவல்., வாட்ஸ்அப் புதிய அப்டேட்- இனி பேஸ்புக் மாதிரி கவர் போட்டோ வைக்கலாம்: இவர்களுக்கு மட்டுமே!

வாட்ஸ்அப் புதுப்பிப்பு அம்சம்

பேஸ்புக் போன்று சுயவிவரங்களுக்கான கவர் போட்டோவை வாட்ஸ் அப்பில் வைப்பதற்கான ஏற்பாட்டு பணியில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சுயவிவரங்களில் கவர் போட்டோக்களை வைக்க பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சம் சமீபத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அம்சம் வணிக கணக்குகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வாட்ஸ்அப் புதுப்பிப்பு அம்சம்

பயனர் அனுபவத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் புதுப்பிப்புகளில் செயல்பட்டு வருகிறது. பிரபல சமூகவலைதளமான வாட்ஸ்அப் சமீபத்தில் சுயவிவரங்களுக்கான புதிய மேம்படுத்தல் அம்சத்தை வெளியிட இருக்கிறது. இந்த அம்சமானது பேஸ்புக் போன்று கவர் போட்டோக்களை வைப்பது ஆகும். வாட்ஸ்அப் சுயவிவரங்களில் கவர் புகைப்படங்களை அமைக்க பயனர்களை அனுமதிக்க இருக்கிறது. இந்த புதிய அம்சம் சமீப நாட்களாக காணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்கள் சௌகரியத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுயவிவரங்களில் கார்ட் புகைப்பட அம்சம்

Wabetainfo தகவலின்படி, வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் சுயவிவரங்களில் கார்ட் புகைப்பட அம்சத்தை விரைவில் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த அம்சம் வாட்ஸ்அப் பிசினஸ் கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் நிலையான பயனர் கணக்குகளுக்கு கிடைக்காது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த அம்சம் பீட்டா பயன்பாட்டில் செயல்பட்டு வருவதாகவும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் வணிகச் சுயவிவர அமைப்புகளில் சில மாற்றங்கள் இருக்கும் என அறிக்கை தகவல் கூறுகிறது.

ஸ்கிரீன்ஷாட் தகவல்

Wabetainfo வெளிப்படுத்திய ஸ்கிரீன்ஷாட் தகவலின்படி, வாட்ஸ்அப் உங்கள் வணிக அமைப்புகளில் புதிய கேமரா பட்டனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என கூறுகிறது. கவர் புகைப்படங்களை அமைக்க புதிய கேமரா பட்டன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கவர் படத்தை அமைக்க நீங்கள் இந்த கேமரா பட்டனை அழுத்தி புதிய புகைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம், அல்லது கேலரியில் இருந்து ஒரு புகைப்படத்தை தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளலாம். உங்கள் வணிக சுயவிவரத்தை பார்வையிடும் இது புகைப்படத்தை பயனர்களால் பார்க்க முடியும். இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் இருக்கிறது, இதன் வெளியீட்டு தேதி இன்னும் சரியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த அம்சம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் உபயோகிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

குரல் அழைப்புக்கான புதிய அம்சம்

அதேபோல் வாட்ஸ்அப், இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தனது பீட்டா ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் குரல் அழைப்புக்கான புதிய இடைமுகத்தை உருவாக்கி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய இடைமுகம், நிச்சயமாக, ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இது ​பீட்டா அம்சமாக ஆண்ட்ராய்டு பயனர்களுடன் இப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.22.5.4 என்ற வாட்ஸ்அப் அப்டேட்டில் இந்த சோதனை அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளதாக WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய குரல் அழைப்பு இடைமுகத்தைக் வழங்குகிறது என்று WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது. புதிய இடைமுகம் பயன்பாட்டை மிகவும் அழகியல் மற்றும் செயல்பாட்டில் எளிதாக்குவதற்கு உதவுகிறது என்று WABetaInfo கூறியுள்ளது.

நவீனமாகவும் நேர்த்தியாகவும் மாற்றப்படும்

ஒட்டுமொத்தமாக, WABetaInfo பகிர்ந்த படத்திலிருந்து, இடைமுகம் நவீனமாகவும் நேர்த்தியாகவும் மாற்றப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இந்த புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் மேற்கொள்ளும் குரல் அழைப்புகளுக்கான அலைவடிவங்களை அறிமுகம் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. குழு குரல் அழைப்பில் யார் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக, வாட்ஸ்அப் அலைவடிவங்களை இப்போது கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இனி வாட்ஸ்அப் பயனர்கள் குழு அரட்டைகளில் யார் பேசுகிறார்கள் என்பதை ஸ்பீக்கர் அடையாளம் மூலம் காண முடியும். தற்போது, ​​அழைப்பின் போது எந்தப் பயனர் பேசுகிறார் என்பதை அடையாளம் காண வழி எதுவும் இல்லை என்பதனால் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தை உருவாக்கி சோதனை செய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக