Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 பிப்ரவரி, 2022

போலி விண்டோஸ் 11 இன்ஸ்டாலர்; யூஸர்களை எச்சரித்த HP நிறுவனம்!

 போலி  விண்டோஸ் 11 இன்ஸ்டாலர்; யூஸர்களை எச்சரித்த HP நிறுவனம்!

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கடந்த ஆண்டு விண்டோஸ் 11-யை பயன்பாட்டிற்கு வந்தது. புதுப்பிக்கப்பட்ட ஸ்டார்ப் அப் மெனு, சரளமான வடிவமைப்பு மற்றும் மிகவும் தேவையான அப்டேட்கள் விண்டோஸ் 11 இயங்கு தளத்தில் உள்ளதால் விண்டோஸ் 7க்கு அடுத்து வந்த எடிசனை பயன்படுத்தி வருபவர்கள் விண்டோஸ் 11 இயங்குதளத்தை அப்டேட் செய்து கொள்ளும் படி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இணையத்தில் போலி விண்டோஸ் 11 இன்ஸ்டாலர் உலவி வருவதாகவும், எச்.பி.லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் விண்டோஸ் 11-யை நிறுவும் முன்பு ஜாக்கிரதையாக இருக்கும் படியும், எச்.பி. நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. ஏனென்றால் புதிய Windows 11-யை வைத்து போலி மால்வேர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், Redline மால்வேர் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஒருமுறை நீங்கள் அந்த போலி விண்டோஸ் 11 நிறுவியை உங்களுடைய கணினியில் டவுன்லோடு செய்துவிட்டீர்கள் என்றால், உங்களுடைய முக்கியமான தகவல்களை திருடலாம், பாஸ்வேர்ட் போன்ற தகல்கள் உங்களுடைய கணினியில் இருந்து கையகப்படுத்தப்படலாம் என ஹெச்.பி.யின் சைபர் செக்யூரிட்டி பரிசோதனையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் அதிகாரப்பூர்வ மைக்ரோசாப்ட் பக்கத்தைப் போலவே இருக்கும் Windows-upgraded.com என்ற டொமைனை HP ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல போலி லிங்க்-கள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ள போதும், பல லிங்க்-கள் இன்னும் வெளியில் உலவிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஹெச்.பி. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்படிப்பட்ட போலியான இணையதளத்தில் இருந்து கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் யூஸர்களுக்கு “Windows11InstallationAssistant.zip” என்ற ஜிப் பைல் வெறும் 1.5 எம்.பி. என்ற அளவில் கிடைக்கும். அதில் ஆறு விண்டோஸ் டிஎல்எல்கள், ஒரு எக்ஸ்எம்எல் கோப்பு மற்றும் போர்ட்டபிள் எக்ஸிகியூட்டபிள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். காப்பகத்தை டிகம்ப்ரஸ் செய்த பிறகு, யூஸருக்கு 753 MB அளவு கொண்ட பைல் கிடைக்கும்/ அத்துடன் இயங்கக்கூடிய Windows 1InstallationAssistant.exe 751 MB என்ற பைல் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

HPயின் மால்வேர் ஆய்வாளர் வுல்ஃப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவருமான பேட்ரிக் ஸ்க்ல்ஃபர் கூறுகையில், "அச்சு அசலாக ஒரினல் போலவே இருந்த டொமைன் எங்கள் கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் அது புதிதாகப் பதிவுசெய்யப்பட்டது, ஒரு முறையான பிராண்டைப் பின்பற்றியது மற்றும் குறிப்பிட்ட பிராண்டின் சமீபத்திய அறிவிப்பும் பயன்படுத்தப்பட்டிருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

யூஸர்களை எளிதில் ஏமாற்றும் வகையில் ஒரிஜினல் போலவே போலி வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஹெச்.பி. யூஸர்கள் விண்டோஸ் 11 இயங்குதளத்தை தரவிறக்கம் செய்யும் முன்பாக நம்பகமான இணையதளங்களில் இருந்து அதனை டவுன்லோடு செய்வதை உறுதிசெய்து கொள்ளும் படியும், அதன் மூலமாக மட்டுமே ரெட்லைன் மால்வேர் உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஹேக் செய்ய முடியாது என்றும் ஹெச்.பி. நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக