Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 பிப்ரவரி, 2022

வைஃபை ரூட்டரை எந்த இடத்தில் வைத்தால் சிறந்தது? அதிக இணைய வேகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டிற்குள் நிலையான வைஃபை சிக்னலைக் கண்டறிவது சிரமமாக இருக்கிறதா?

கடந்த சில ஆண்டுகளில், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட மடமடவென உயர்ந்தது. வீட்டில் இருந்து வேலைபார்ப்பவர்களின் அத்தியாவசிய முக்கிய தேவையாக, நிலையான இணையச் சேவை கருதப்பட்டது. இதற்காக பெரும்பாலானோர், அவர்களின் தேவைக்கேற்ற டேட்டா திட்டங்களைத் தேர்வு செய்து பயன்படுத்தத் துவங்கினார்கள். ஆனால், அதன் வேகம் போதாத காரணத்தினால், பயனர்கள் அதிவேக டேட்டா சேவைகளைக் கையில் எடுக்கத் துவங்கினர். இதன் விளைவாக, பல வீடுகளில் வைஃபை ரூட்டர்கள் படையெடுக்கத் துவங்கியது.

வீட்டிற்குள் நிலையான வைஃபை சிக்னலைக் கண்டறிவது சிரமமாக இருக்கிறதா?

மக்கள் அவர்களின் தேவைக்கேற்ப, அவர்களுக்கான திட்டங்களையும், சாதனங்களையும் தேர்வு செய்யத் துவங்கியுள்ளனர். இதன் விளைவாக, அதிவேக பிராட்பேண்ட் திட்டம் மற்றும் சிறந்த வைஃபை ரூட்டரிகளில் மக்கள் கணிசமான பணத்தைச் செலவு செய்கிறார்கள். இருப்பினும், சில வீட்டிற்குள் நிலையான வைஃபை சிக்னலைக் கண்டறிவது இன்னும் சிரமமான காரியமாகத் தான் இருக்கிறது. நீங்கள் இது போன்ற சிக்கலை சந்தித்துச் சிரமப்படுகிறீர்களா? அப்படியானால், இந்த பதிவு முழுமையாக உங்களுக்கானது தான்.

அதிக செலவு செய்து வாங்கிய ரூட்டரில் கூட இணைய வேகம் மெதுவாக உள்ளதா?

என்னதான் சக்தி வாய்ந்த வைஃபை ரூட்டர்களை நீங்கள் வாங்கியிருந்தாலும், அதில் அதிவேக இணையச் சேவையின் முழுமையான வேகத்தை உங்களால் அடையவில்லை என்றால், அதற்கான முக்கியமான காரணமாகக் கருதப்படுவது, உங்களுடைய வைஃபை ரூட்டர் சரியான இணைய கவரேஜை பெற முடியாத தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. Wi-Fi கவரேஜின் வலிமை, அது எந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்பதுடன் தொடர்புடையது. இடத்தின் சிறிய மாற்றத்துடன், உங்கள் வைஃபை சிக்னலை மேம்படுத்தலாம்.

வைஃபை ரூட்டரின் வலிமையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

சரி, என்ன மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள வைஃபை ரூட்டரின் வலிமையை அதிகரிக்க முடியும் என்பதைப் பார்க்கலாம். நாங்கள் இங்குக் கூறும் சில எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி, அவற்றை நீங்கள் முயற்சி செய்தால் நிச்சயமாக உங்களுடைய வைஃபை ரூட்டரின் வலிமையை அதிகரிக்கலாம். இதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் இணைய வேகத்தின் சக்தியையும் கணிசமாக அதிகப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை முதலில் பார்க்கலாம்.

வைஃபை ரூட்டரை வைப்பதற்கான சரியான இடம் எது?

முன்பே சொன்னது போல், நிலையான சக்தி வாய்ந்த வைஃபை இணைப்பைப் பெறுவதற்கு, முதலில் உங்களுடைய வைஃபை ரூட்டர் சாதனம் சரியாய் இடத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் நல்ல சிக்னல் வலிமையைப் பெற வேண்டும் என்றால், நீங்கள் உங்களுடைய Wi-Fi ரூட்டரை சாதனத்தை, உங்கள் வீட்டின் மையப் பகுதியில் வைக்க வேண்டும். உங்கள் அறையின் அழகியலைக் கெடுக்கும் வயர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் அவற்றைச் சுவரில் நேர்த்தியாகப் பொருத்தலாம் அல்லது கேபிள்களை டேக் செய்து இணைக்கலாம்.

இந்த இடத்தில் மட்டும் உங்கள் வைஃபை ரூட்டரை வைக்காதீர்கள்

எப்போதும் உங்கள் வைஃபை ரூட்டர் சாதனத்தை ஒரு திறந்த அலமாரியில் வைக்க நினைவில் கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், வெற்றுப் பார்வையில் தெரியும் படியான சுவரில் பொறுத்திவிடுங்கள். குறிப்பாக மூடி வைக்கப்படும் அலமாரிகளில் உங்கள் வைஃபை ரூட்டர் சாதனத்தை வைக்காதீர்கள். இது சிக்னல் அளவை மட்டப்படுத்தும். அதிக சிக்னலை பெற, உங்கள் வைஃபை ரூட்டர் சாதனத்தை அலமாரியில் மறைப்பதை விட, அறையில் திறந்த வெளியில் வைப்பது இரண்டு மடங்கு சிக்னலை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வைஃபை சிக்னல்களில் குறுக்கிடக்கூடிய விஷயங்கள் இவை தானா?

வீட்டைச் சுற்றிலும் வைஃபை சிக்னல்களில் குறுக்கிடக்கூடிய விஷயங்கள் என்று சில விஷயங்கள் உள்ளன. அதாவது, உங்கள் வீட்டில் உள்ள கான்கிரீட் சுவர்கள், உலோகப் பொருட்கள் போன்றவை வைஃபை சிக்னலை குறுக்கிடக்கூடியவை. ஆனால், வீட்டில் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பது என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், சிறிய மாற்றங்களுடன் உலோகப் பொருட்கள் அதிகம் இல்லதா இடத்தில் வைஃபை ரூட்டரை வைக்கலாம். இது சிக்னல் குறுக்கீடை குறைக்கும். அதேபோல், உங்கள் வைஃபை ரூட்டரை உயர்ந்துவது சிறந்தது. அதாவது, சிறந்த கவரேஜைப் பெற வைஃபை ரூட்டரை எங்காவது உயரமாக வைப்பது நல்லது.

வைஃபை ரூட்டரின் ஆண்டெனாவை எந்த திசையில் வைப்பது சிறப்பானது?

நல்ல கவரேஜை பெற, வைஃபை ரூட்டரில் உள்ள ஆண்டெனாவின் நிலை ஒரு முக்கியமான காரணியாகும். சிறந்த கிடைமட்ட கவரேஜைப் பெற, நீங்கள் ஆண்டெனாவை மேல்நோக்கி வைக்கலாம். செங்குத்து கவரேஜுக்கு, அவற்றைச் சற்று பக்கவாட்டில் வைக்க முயற்சி செய்யலாம். ஆன்டெனாவை சுவர்களின் திசையில் அல்லது 90 டிகிரியில் வைப்பதைத் தவிர்க்கவும். எப்போதும், உங்கள் வைஃபை ரூட்டரின் ஆண்டெனாவை 45 டிகிரி அல்லது 60 டிகிரிக்கு இடையில் இருக்கும் படி வைப்பது சிறப்பான கவரேஜை உங்களுக்கு வழங்கும் என்பதை மறக்காதீர்கள்.

வைஃபை ரூட்டர் சாதனம் மற்றும் உங்கள் இணைப்பு சாதனம் எவ்வளவு தொலைவில் இருக்கலாம்?

Wi-Fi ரூட்டர்கள் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி இணையத்தை வழங்குவதால், இது ஒரு வானொலி நிலையம் போன்றது. உங்களுக்குப் பிடித்த வானொலி நிலையத்தை நீங்கள் இணைப்பது போன்றது, நீங்கள் வரம்பிற்கு வெளியே இருந்தால், உங்களுக்கான சரியான இணைப்புடன் அது இணைக்கப்படாமல் போகலாம். இது வைஃபை சாதனங்களுக்கும் ஒரே மாதிரியாகச் செயல்படுகிறது. உங்களின் வைஃபை ரூட்டர் சாதனம் திசைவியிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளதோ, அவ்வளவு பலவீனமான சிக்னல் தான் உங்கள் இணைக்கப்பட்ட சாதனத்துடன் கிடைக்கும் என்பதை மறக்காதீர்கள்.

வைஃபை ரூட்டருக்கான இறுதி இடத்தை சரியாகத் தேர்வு செய்யுங்கள்

சில நேரங்களில், உங்கள் இடத்திற்கு அருகிலுள்ள மற்றொரு திசைவி போன்ற வெளிப்புற காரணிகளால் பலவீனமான வைஃபை சிக்னல் ஏற்படலாம். இணைக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் இணைப்புகள் ஏராளமாக இருப்பதால், நீங்கள் குறுக்கீடு இல்லாமல் இருக்க முடியாது. நீங்கள் இன்னும் குறைவான குறுக்கீடுகளுடன் ஒரு இடத்தைப் பெற முயற்சி செய்யலாம் மற்றும் அதை உங்கள் வைஃபை ரூட்டருக்கான இறுதி இடமாகத் தேர்வு செய்யலாம். இந்த தகவலை வைத்து உங்கள் வைஃபை ரூட்டரின் சரியான இடத்தை தேர்வு செய்து, உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்கலாம்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக