Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 17 பிப்ரவரி, 2022

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இந்த சைக்கிளுக்கு செம டிமாண்ட்.. இந்தியா வந்திறங்கிய பிரபல வெளிநாட்டு மிதிவண்டி!

 நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இந்த சைக்கிளுக்கு வரவேற்பு அமோகம்... இந்தியா வந்திறங்கிய பிரபல வெளிநாட்டு மிதிவண்டி!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் அவந்தி கைரோ எஃப்எம்1 மிதிவண்டி இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகத்தில் என்னதான் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைத்தாலும் தற்போதும் ஒரு சிலர் மிதிவண்டியை பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இவை, அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என நம்புகின்றனர்.

எனவேதான் பெரும் புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்கள் வீட்டில்கூட குறைந்த பட்சம் ஒரு சைக்கிளாவது இருந்து விடுகின்றது. குறிப்பாக, உடல் நலத்தின் மீது அதிக அக்கரைக் கொண்டவர்கள் அதை பயன்படுத்த தவறுவதில்லை. ஏன் நம்ம தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர்கள் கூட சைக்கிளை பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் மிக அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் மிதிவண்டி தயாரிப்பு நிறுவனம் ஒன்று அதன் புகழ்பெற்ற சைக்கிள் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் அவந்தி (Avanti) நிறுவனமே அதன் பிரபல மிதிவண்டியை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக ஸ்காட் ஸ்போர்ட்ஸ் இந்தியா (Scott Sports India) எனும் நிறுவனத்துடன் அது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்த கூட்டணியின் வாயிலாகவே தனது அனைத்து தயாரிப்புகளையும் அவந்தி நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்ய இருக்கின்றது. தற்போது நிறுவனம் அதன் புகழ்பெற்ற அவந்தி கைரோ எஃப்எம்1 (Avanti Giro FM1) மிதிவண்டியை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 40,990 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது ஓர் பிரீமியம் தர சைக்கிள் என்பதால் இத்தகைய அதிகபட்ச விலையை நிர்ணயித்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆண் மற்றும் பெண் என இருபாலரும் இந்த சைக்கிளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை இந்த மிதிவண்டி கொண்டிருக்கின்றது.

எனவேதான் உலக நாடுகள் சிலவற்றில் அவந்தி கைரோ எஃப்எம்1 சைக்கிளுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. குறிப்பாக, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மிக சூப்பரமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆகையால், இந்தியாவிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கக் கூடும் என்கிற நம்பிக்கையில் இந்த சைக்கிளை இங்கு அறிமுகம் செய்திருக்கின்றது, அவந்தி.

இதுமட்டுமின்றி இன்னும் சில மாடல்களையும் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் ஒட்டுமொத்தமாக 12 மிதிவண்டி மாடல்களைக் களமிறக்கும் எண்ணத்தில் அவந்தி இருக்கின்றது. சிறுவர்களுக்கான சைக்கிள் மாடல்களும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், அடுத்த ஆறு மாதங்களில் 100 விற்பனையாளர்களை நாடு முழுவதும் உருவாக்க இருப்பதாகவும் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. "தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் உயர் தரத்திலானவை என்றும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சந்தையில் நல்ல வரவேற்பை இவைப் பெற்றிருக்கின்றன. இந்நிலையிலேயே தற்போது இந்தியாவில் கால் தடம் பதித்திருக்கின்றோம்" என நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிமுகத்தைத் தொடர்ந்து நாட்டில் உள்ள 70 டீலர்கள் வாயிலாக கைரோ எஃப்எம்1 சைக்கிளின் விற்பனை பணிகளைத் தொடங்கியிருப்பதாக ஸ்காட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 'அவந்தி டிசைன் டெக்னாலஜி'-யே இந்த சைக்கிளை வடிவமைத்திருக்கின்றது. அதிக பலன்களை வழங்கும் வகையில் அது சைக்கிளை வடிவமைத்திருக்கின்றது.

மேலும், ரைடிங் அனுபவத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிக தொழில்நுட்ப வசதிகளையும் சைக்கிளில் அவந்தி டிசைன் டெக்னாலஜி சேர்த்திருக்கின்றது. மைக்ரோஷிஃப்ட் அகோலைட் டிரைவ்டிரைன் அம்சம் இந்த சைக்கிளில் சேர்க்கப்பட்ட சூப்பர் சிறப்பம்சமாக காட்சியளிக்கின்றது. இது இயக்கத்தை கூடுதல் மென்மையானதாகவும், சிறப்பானதாகவும் மாற்ற உதவும் என நிறுவனம் கூறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக