Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 17 பிப்ரவரி, 2022

உனக்கு சொந்தமான பொருள், ஆனால் மற்றவர்கள் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------------------
இன்றைய காமெடிகள்...!!
-----------------------------------------------------------------------
கணவன் : நீ தான் எனக்கு மனைவியா வருவன்னு எங்க ஸ்கூல் மிஸ் அப்பவே சொன்னங்க.
மனைவி : எப்படி சொன்னாங்க?
கணவன் : பண்ணி மேய்க்க தான் நீ லாயக்குன்னு சொன்னங்க.
மனைவி : 😡😡
-----------------------------------------------------------------------
மன்னர் : எதிரி நாட்டு மன்னனை வென்று நாம் புதிய புவியியல் படைப்போம்!
அமைச்சர் : மன்னா! அது புவியியல் இல்லை.. வரலாறு?
மன்னர் : யோவ்.. விடய்யா! ஒரு ப்ளோவுல ரைமிங்கா வந்துடுச்சி!
அமைச்சர் : 😂😂
-----------------------------------------------------------------------
சிந்தனை துளிகள்...!!
-----------------------------------------------------------------------
1. புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம்.

2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன.

3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது, அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.

4. வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.

5. பொய்க்கல்வி பெருமை பேசும். மெய்க்கல்வி தாழ்த்தி சொல்லும்.

6. மருந்து சிலசமயங்களில் பலனளிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் விஷமோ ஒருபோதும் விளைவு தராமல் போகாது.

7. நன்றாக எழுதுவதைப் போன்றது சத்தியம். அது பழக பழகத்தான் சரியாக வரும்.

8. வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகாது, வாழ்க்கையும் புனிதமாகாது.

9. வளமுடன் வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர். வறுமையில் நீ நண்பர்களை அறிவாய்.

10. திறமை என்பது அனுபவம், அறிவு, ஆர்வம் ஆகிய மூன்று சக்திகளின் வெளிப்பாடே.
-----------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
-----------------------------------------------------------------------
🤔தூய்மையானால் கறுப்பாவேன்... அழுக்கானால் வெள்ளையாவேன். அவன் யார்?

🤔உனக்கு சொந்தமான பொருள்... ஆனால் மற்றவர்கள் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அது என்ன?

🤔மெல்லியதாய் இருக்கும்... தண்ணீர் மேலேயே மிதக்கும்... ஆனால் ஆயிரம் பேர் சேர்ந்தாலும் இதை தூக்க முடியாது. அது என்ன?

🤔ஒல்லியாய் இருப்பான் ஒற்றை கண் உடையவன்... உடம்பிலே பட்டால் 'உஸ்" என்று கத்திடுவாய்... அது என்ன?

விடை: 

🔳கரும்பலகை

💁பெயர்

💧நீர்க்குமிழி

📍ஊசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக