Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 17 பிப்ரவரி, 2022

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கீழப்பரசலூர் மயிலாடுதுறை

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்(திருப்பறியலூர்), கீழப்பரசலூர் –  Aalayangal.com
இந்த கோயில் எங்கு உள்ளது?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழப்பரசலூர் என்னும் ஊரில் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் திருப்பறியலூர் அமைந்துள்ளது. திருப்பறியலூரில் உள்ள கீழப்பரசலூர் என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள தட்சபுரீசுவரரின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கும் காட்சி மிக அற்புதக்காட்சியாகும்.

சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் இத்தலம் நான்காவது தலம் ஆகும்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 104 வது தேவாரத்தலம் ஆகும்.

பழமையான கோயில், சமீபத்தில் திருப்பணிக்கு பிறகு முழுவதும் மாறிவிட்டது.

வேறென்ன சிறப்பு?

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 41வது சிவத்தலமாகும்.
 
உள் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், பைரவர், சன்னதிகள் உள்ளன.

கோஷ்டமூர்த்தங்களாகத் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

சுப்பிரமணியர் திருவுருவம் மயிலின் மீது ஒரு காலை வைத்து நின்றபடி உள்ளது.

வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியுள்ளது.

சூரியனுக்கு தனி சன்னதி இங்கு உண்டு.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

யாகசம்ஹார மூர்த்திக்கு தமிழ்வருட பிறப்பு, ஆடி பிறப்பு, ஐப்பசி பிறப்பு, புரட்டாசி சதுர்த்தி, தை முதல் தேதி, வைகாசி திருவோணம் நாட்களில் ஆறு முறை அபிஷேகம் செய்யப்படுகிறது.

கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சிவன் வீதி உலா வருவது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

சிவபெருமான் வீரம் புரிந்த தலம் என்பதால் அனைத்து வித தோஷமும் நிவர்த்தி அடைய இங்குவந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

தோஷங்கள் நிவர்த்தி அடைய சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக