Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 பிப்ரவரி, 2022

உங்கள் பேச்சுக்கு ஒரு சவால்... எதிர்பார்ப்பு என்ன செய்யும்? குட்டிக்கதை - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------------------------------
மனைவி : என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் : நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா... இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?
மனைவி : 😏😏
-----------------------------------------------------------------
பாலு : டாக்டர் உன்னை எதுக்குத் திட்டுறாரு?
பெயிண்டர் : 'மீண்டும் வருக"-ன்னு போர்டு எழுதச் சொன்னாரு. நான் 'மீண்டு வருக"-ன்னு எழுதிட்டேன். அதான்.
பாலு : 😂😂
-----------------------------------------------------------------
வாக்குறுதி...!!
-----------------------------------------------------------------

கடுங்குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான். 

அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான். 'குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?" என்று கேட்டான்.

'ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!" என்றான் காவலாளி.

அதற்கு மன்னன், 'கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.

மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.

அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்ததை மறந்து விட்டான்.

காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.

அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

'மன்னா!! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மௌனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குலைத்து என்னை கொன்று விட்டது".

ஆம்! சகோதரர்களே!

மற்றவர்களிடம் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
-----------------------------------------------------------------
உங்கள் பேச்சுக்கு ஒரு சவால்...!
-----------------------------------------------------------------
சட்டையை கழற்றி சுழற்றி சுழற்றி வீசி வந்த மொட்டையன் கால்தடுக்கி விழுந்து கைலாசம் போனதைப் பார்த்த சொட்டையன் பதறியடித்து வந்து கதறி கதறி அழுதான்.
பழமை உண்மைகள்...!!
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக