Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

பொறியில் சிக்கிய எலி... பொறுமை அவசியம்... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
----------------------------------------------------------------------
கமல் : டேய் மச்சான் நம்ம வாத்தியாரு தம் அடிச்சா கேன்சர் வரும்னு சொல்றாரே உண்மையாடா?
விமல் : இல்ல மச்சி, அவரு பொய் சொல்றாரு, தம் அடிச்சா புகை தான் வரும், நான் பாத்திருக்கேன் மச்சி. 
கமல் : 😜😜
----------------------------------------------------------------------
சுடுகாடு எங்கே இருக்கிறது?
----------------------------------------------------------------------
💥 ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.

💥 அப்போது, மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து, 'நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?" என்று கேட்டார். 

💥 அதற்கு அந்த சிறுவர்கள், 'ஊர் கோடியில் இருக்குது!"... என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள்.

💥 உடனே, 'ஆடு, மாடு, கோழிகளுக்கு எங்கே இருக்கிறது?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார். 

💥 குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்.

💥 அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே, 'இதோ இங்கே இருக்குது...! மாமிசம் சாப்பிடும் அனைவருக்கும் அவர், அவர் வயிரே சுடுகாடு" என்று கூறி வயிற்றை தடவிக் காண்பிக்க, கூட்டத்தில் பலத்த சிரிப்பு எழுந்தது.
----------------------------------------------------------------------
பொறுமை அவசியம்...!!
----------------------------------------------------------------------
எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்..

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோ ஒரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சனைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்...!!!
----------------------------------------------------------------------
எண் - ஒலிப்புச்சொல்..!!
----------------------------------------------------------------------
1 - ஒன்று (ஏகம்)

10 - பத்து

100 - நூறு

1000 - ஆயிரம் (சகசிரம்)

10,000 - பத்தாயிரம் (ஆயுதம்)

1,00,000 - நூறாயிரம் (இலட்சம் - நியுதம்)

10,00,000 - பத்து நூறாயிரம்

1,00,00,000 - கோடி

10,00,00,000 - அற்புதம்

1,00,00,00,000 - நிகற்புதம்

10,00,00,00,000 - கும்பம்

1,00,00,00,00,000 - கணம்

10,00,00,00,00,000 - கற்பம்

1,00,00,00,00,00,000 - நிகற்பம்

10,00,00,00,00,00,000 - பதுமம்

1,00,00,00,00,00,00,000 - சங்கம்

10,00,00,00,00,00,00,000 - வெள்ளம் (சமுத்திரம்)

1,00,00,00,00,00,00,00,000 - அந்நியம்

10,00,00,00,00,00,00,00,000 - அர்த்தம்

1,00,00,00,00,00,00,00,00,000 - பரார்த்தம்

10,00,00,00,00,00,00,00,00,000 - பூரியம்

1,00,00,00,00,00,00,00,00,00,000 - பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக