Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 பிப்ரவரி, 2022

பேடிஎம் ஆப்பில் அறிமுகமான 'டேப் டு பே' அம்சம்: இயக்குவது எப்படி? இதனால் என்ன பயன்?

 Paytm ने लॉन्च की Tap to Pay सर्विस, इंटरनेट कनेक्शन के बिना भी होगा  पेमेंट, जानें पूरी प्रोसेस - The Financial Express

இந்தியாவில் பல வகையான பணப்பரிமாற்றம் சார்ந்த பல ஆப்கள் வந்துவிட்ட போதும் கூட பேடிஎம் ஆப் ஆனது எந்த விதமான சரிவையும் காணவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட - பல்வேறு வகையான யூசர்களுக்கு ஏற்றவாறு பேடிஎம் தனது சேவைகளை மேம்படுத்திக் கொண்டே போவது ஒரு முக்கிய காரணம் ஆகும்.

அப்படியாக சமீபத்தில், இந்த பேமண்ட் பிளாட்ஃபார்ம் ஆனது 'டேப் டு பே' என்கிற அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது, இந்த அம்சம், யூசர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை பிஓஎஸ் மெஷினில் (PoS Machine) மேல் வெறுமனே டேப் செய்வதன் மூலம் மிகவும் விரைவான பரிவர்த்தனைகளை செய்ய உதவுகிறது. அறியாதோர்களுக்கு, ஸ்வைப்பிங் மெஷினை தான் இங்கே பிஓஎஸ் மெஷின் என்று குறிப்பிடுகிறோம்.

இந்த அம்சமானது என்எஃப்சி (NFC) வழியிலாக பணம் செலுத்த உதவும், அதாவது இதன் கீழ் பணம் செலுத்த உங்களுக்கு இணைய இணைப்பு தேவைப்படாது. இருப்பினும், இந்த (அம்சம்) சேவை, தற்போது வரை ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

ஐபோன் யூசர்களுக்கான என்எஃப்சி-சப்போர்ட் ‘டேப் டு பே’ அம்சமானது ஆப்பிள் பே (Apple Pay) வழியாக மட்டுமே அணுக முடியும் என்பதால், ஐஓஎஸ் யூசர்கள் இந்த பேடிஎம் அம்சம் / சேவையை அணுக முடியாது, நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் பே அம்சம் தற்போது வரை இந்தியாவில் அணுக கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக