இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை பற்றிய வதந்திகள் இன்று - நேற்றல்ல, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக இணையத்தில் உலா வருகின்றன. முகேஷ் அம்பானி தலைமையிலான இந்த பிராண்ட் நாம் எதிர்பார்த்தபடி கடந்த 2021 ஆம் ஆண்டில் அதன் ஜியோ போன் 5ஜி-யை அறிமுகம் செய்யவில்லை தான். அதற்காக குறிப்பிட்ட மாடல் செயல்பாட்டில் இல்லை என்று கூறி விட முடியாது.
புதிதாக கிடைத்துள்ள ஒரு தகவலின்படி, ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிவிக்கப்படலாம். மேலும் ஆண்ட்ராய்டு சென்ட்ரல் வழியாக வெளியான புதிய அறிக்கை ஒன்றின் வழியாக, இந்தியாவில் ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்கிற தோராயமான விவரங்களையும் நம்மால் அறிய முடிகிறது.
ஜியோ போன் 5ஜியின் எதிர்பார்க்கப்படும் இந்திய விலை விவரம் மற்றும் அம்சங்கள்:
கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, இந்தியாவில் ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.9,000 முதல் ரூ.12,000 க்குள் எங்காவது ஒரு புள்ளியில் அமரலாம். மலிவு விலைக்கு பெயர் போன ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கடந்த காலங்களில் செயல்பாடுகளையும், விலையை நிர்ணயம் செய்வதில் இருக்கும் ஜியோவின் தீவிரத்தன்மையையும் நாம் கருத்தில் கொண்டால், ஜியோ போன் 5ஜி மாடலின் விலை ரூ. 10,000 க்குள் இருக்கும் என்று எவரும் அனுமானிக்கலாம்.
அம்சங்களை பொறுத்தவரை, ஜியோ போன் 5ஜி மாடல், 1,600 x 720 பிக்சல் ரெசல்யூஷன் உடன் 6.5-இன்ச் அளவிலான எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி பேனலைக் கொண்டிருக்கும். மேலும் இதன் டிஸ்பிளே ஸ்டாண்டர்ட் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். மேலும் ஜியோ போன் 5ஜி ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி ப்ராசஸர் மூலம் சக்தியூட்டப்படும். இது அட்ரெனோ 619 ஜிபியூ, 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அளவிலான விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும்.
சாப்ட்வேரை பொறுத்தவரை, ஜியோ போன் 5ஜி ஆனது கூகுள் பிளே சேவைகள் மற்றும் ஜியோ டிஜிட்டல் சூட் ஆப்களை வழங்கும்படியான ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்டு அனுப்பப்படலாம். முன்னதாக வெளியான ஜியோ போன் நெக்ஸ்ட்டை போலவே இந்த 5ஜி போனும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-இன் கஸ்டமைஸ்டு வெர்ஷனாக இயங்கும், அதாவது ஆல்வேஸ் ஆன் கூகுள் அசிஸ்டண்ட், ரீட்-அலௌட் டெக்ஸ்ட், கூகுள் லென்ஸ் மற்றும் கூகுள் டிரான்ஸ்லேட், பல்வேறு இந்திய மொழிகளுக்கான ஆதரவு போன்ற தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும்
இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது என்3, என்5, என்28, என்40 மற்றும் என்78 பேண்ட்களை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, ஜியோ போன் 5ஜி ஆனது 13எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ கேமராவைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், 8எம்பி செல்பீ கேமராவை பேக் செய்யும். இதன் பின்புற கேமரா அமைப்பு, 1080பி வீடியோக்களை 60எஃப்பிஎஸ் (fps) வேகத்திலும் மற்றும் 720பி வீடியோக்களை 120எஃப்பிஎஸ் வேகத்திலும் படமாக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
பேட்டரியைப் பொறுத்தவரை, ஜியோ போன் 5G ஆனது யூஎஸ்பி டைப்-சி மற்றும்18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட 5,000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
சுவாரஸ்யமாக இந்த 5ஜி போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் இருக்கலாம். தற்போதைய நிலவரப்படி, வரவிருக்கும் ஜியோ போன் 5ஜி பற்றிய அனைத்து தகவல்களும் இவ்வளவுதான். வரும் மாதங்களில் ஜியோ போன் 5ஜி பற்றிய அதிகாரபூர்வமான சில அறிவிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக