Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில் திருப்புவனம் தஞ்சாவூர்

இந்த கோயில் எங்கு உள்ளது?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்னும் ஊரில் அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருப்புவனம் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. திருப்புவனத்துக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சரபேஸ்வரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.

சுவாமியின் இன்னொரு பெயர் நடுக்கம் தீர்த்த நாயகன். அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.

அம்பாள் நான்கு கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறாள்.

வேறென்ன சிறப்பு?

பெரிய திருச்சுற்றுடன் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. கருவறையின் வெளியே திருச்சுற்றில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன.

இராமாயண, மகாபாரத கதைகளை விளக்கும் சிற்பங்கள் கோயில் முழுக்க நிறைந்து காணப்படுகிறது.

பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் சன்னதிகள் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளது.

சரப தீர்த்தம் உட்பட ஒன்பது தீர்த்தங்கள் உள்ள கோயில் இதுவாகும்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

பங்குனி உத்திரம் மற்றும் பங்குனி பிரம்மோற்சவம் முடிந்தவுடன் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் சரப உற்சவம் நடைபெறும்.

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். நவராத்திரி, சிவராத்திரி அன்று கோயிலில் சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், வழக்கு விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோஷங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோஷங்கள், கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோருக்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி, தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சனைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

சரபேசருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்கிறார்கள். அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, யாகம், புது வஸ்திரம், சந்தனகாப்பு சாற்றுகிறார்கள்.

செவ்வரளிப்பூ, மரிக்கொழுந்து, வில்வம், செண்பக புஷ்பம், நாகலிங்கப்பூ ஆகிய மலர்களால் சரபேசருக்கு சரப அர்ச்சனை செய்வது முக்கிய நேர்த்திக்கடனாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக