Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 பிப்ரவரி, 2022

உயிர் எழுத்து தெரியும்... அது என்ன உடல் எழுத்து?🤔 வாங்க பார்க்கலாம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------
வாய் விட்டு சிரிங்க...!!
---------------------------------------------------
ரமணன் : என்னோட நாலு தம்பிங்க குளத்தில விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
முரளி : அப்படியா! மத்த மூனு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
ரமணன் : இல்லை. அவங்கெல்லாம் மொட்டை.
முரளி : 😂😂
---------------------------------------------------
அதிகாரி : அந்த விமான விபத்து எப்படி நடந்தது?
பைலட் : யாரோ ஒரு பாராசூட் வீரர், விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிப்ட் கேட்டாராம்..
அதிகாரி : 😱😱
---------------------------------------------------
உடல் எழுத்து...!!
---------------------------------------------------
😴அதிகாலை எழு.

🙏ஆகாயம் தொழு.

💗இருதயம் துடிக்க விடு.

👄ஈரழுந்த பல் தேய்.

💦உடல் வேர்வை கழி.

💪ஊளைச்சதை ஒழி.

🐃எருதுபோல் உழை.

🍛ஏழைபோல் உண்.

🚹ஐம்புலன் பேணு.

🚭ஒழித்துவிடு புகை, மதுவை.

🏃ஓட்டம் போல் நட.

💊ஒளதடம் பசி.

💪அஃதாற்றின் எஃகாவாய்.
---------------------------------------------------
இன்றைய கடி...!!
---------------------------------------------------
ஈக்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன?

🐝ஈ-மெயிலில்...😎

ஒரு Police தேங்காய் எடுத்துக்கிட்டு கைதியை பார்க்க போனாராம்... ஏன்?

🥥துருவி துருவி கேள்வி கேட்க தான்.😜
---------------------------------------------------
யார் இதயத்தில் யார்?
---------------------------------------------------

💞'கடவுளே.. எல்லோரையும் நேசிக்க ஆரம்பித்து விட்டேன்... அனைத்து பொருட்கள் மீதும் அன்பு பொங்குகிறது.. இப்போதுதான், நீங்கள் என் இதயத்தில் குடி புகுந்து இருப்பது போல தோன்றுகிறது" என்றான் அவன்...

💞'இல்லை.. இப்போதுதான் நீ என் இதயத்தில் குடி புகுந்து இருக்கிறாய்" என்றார் கடவுள்...!!
 ---------------------------------------------------
இதற்கு பதில் சொல்லுங்க...!!
 ---------------------------------------------------
வாயில்லை... பல் இல்லை... ஆனால் கடிக்கும்! 

👡செருப்பு...

கை இல்லை... விரல் இல்லை... ஆனால் அடிக்கும்!

🥢பிரம்பு...

கால் இல்லை... தரை இல்லை... ஆனால் ஓடும்! 

⏰கடிகாரம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக