Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 பிப்ரவரி, 2022

பழைய பெட்ரோல், டீசல் காரை எலக்ட்ரிக் காராக மாற்றும் திட்டம்.. அசத்தும் டெல்லி அரசு..!

 டெல்லி அரசு

இந்தியாவில் பெர்டோல், டீசல் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழ்நிலை பாதிப்பது மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் அதிகப்படியான நிதிநெருக்கடி உருவாகிறது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் 2070க்குள் இந்தியா நெட் ஜீரோ அளவீட்டை அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.

 இந்த நிலையில் தான் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் தற்போது டெல்லி அரசு மிக முக்கியமான மற்றும் அவசியமான திட்டத்தை அறிவித்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்தாலும், எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிக்கப் பெரும்பாலான பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களின் விலையும் அதிகமாக உள்ளது.

டெல்லி அரசு

இதனால் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது. இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கும் வகையில் டெல்லி அரசு பழைய பெட்ரோல், டீசல் கார்களை எலக்ட்ரிக் கிட்ஸ் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

பழைய பெட்ரோல், டீசல் வாகனம்

டெல்லி அரசின் போக்குவரத்துத் துறை தற்போது பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் ரெட்ரோபிட்மென்ட் சென்டரை பதிவு செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது.

10 எலக்ட்ரிக் கிட் உற்பத்தியாளர்கள்

பழைய ICE வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கு இதுவரை சுமார் பத்து எலக்ட்ரிக் கிட் உற்பத்தியாளர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இதனால் எலக்ட்ரிக் வாகன பிரிவில் புதிய வர்த்தகப் பிரிவு ஒன்று இந்தியாவில் உருவாகியுள்ளது.

அங்கீகாரம்

எலக்ட்ரிக் கிட் உற்பத்தியாளர் அல்லது சப்ளையர் மூலம் கிட் பொருத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்படுவது மட்டும் அல்லாமல் எப்படிக் கிட்களைப் பழைய பெட்ரோல், டீசல் கார்களிள் எப்படிப் பொருத்த வேண்டும் என்பதற்கான வழிமுறை மற்றும் பயிற்சிகளையும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

பிட்னஸ் டெஸ்ட்

மேலும் எலக்ட்ரிக் கிட் பொருத்தப்பட்ட வாகனங்களின் பிட்னஸ் டெஸ்ட்-ஐ வருடம் ஒருமுறையாவது செய்ய வேண்டும், கிட்களைப் பொருத்தும் நிறுவனம் அல்லது அமைப்பு அதன் உரிமையாளர்களிடம் முழுமையாக விளக்குவது மட்டும் அல்லாமல் எழுத்துப்பூர்வமாகவும் உறுதி அளிக்க வேண்டும் என டெல்லி அரசின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வெற்றி

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது காட்டிலும் கட்டாயம் இந்த எலக்ட்ரிக் கிட் பொருத்துவது மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கும், இந்தியா போன்ற நடுத்தர மக்கள் அதிகமாக இருக்கும் நாட்டில் இதுபோன்ற திட்டங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும்.

தரம் கேள்வி

அதேவேளையில் இந்த எலக்ட்ரிக் கிட்களின் திறன், பயன்பாடு எப்படி இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கும் நிலையில் இந்த மாற்றத்தைப் பொறுத்திருந்து தான் கவனிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக