Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 பிப்ரவரி, 2022

ஆன்லைனில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆர்டர் செய்த பெண்: ஆனால் பார்சலில் வந்தது இதுதான்.!

  சாமான், ஆடை அல்லது கருவிகள் என

தற்போது நாம் அனைவரும் இணையதளங்களை மிகவும் சார்ந்து வாழ்கிறோம். அதாவது தகவல்களை அறிந்து கொள்வதில் தொடங்கி பொருட்களை வாங்குவது வரை எல்லாமே ஆன்லைனில் தான். சொல்லப்போனால்
இண்டர்நெட் என்பது கிட்டத்தட்ட நம் வாழ்வின் முதுகெலும்பாக மாறிக் கொண்டே வருகிறது என்றே கூறலாம்.

மளிகை சாமான், ஆடை அல்லது கருவிகள் என எதை வாங்கவும் மக்கள் அணுகும் ஒரே இடமாக ஆன்லைன் ஷாப்பிங் திகழ்கின்றன. அதுவும் ஆன்லைனில் தளங்களில் சில பொருட்கள் சலுகை விலையில் கிடைப்பதால் மக்கள், இதையே அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில் ஆன்லைனில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன்ஆர்டர் செய்த பெண்ணுக்கு, பார்சலில் ஹாண்ட் வாஷ் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இங்கிலாந்தில் வசித்து வரும் கௌலா லாஃப்கெய்லி என்ற பெண் சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள பிரபலமான ஆன்லைன் தளம் ஒன்றின் மூலம் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலை ஆர்டர் செய்துள்ளார். குறிப்பாக இந்த சாதனத்தின் விலை சுமார் ஒன்றரை லட்சம் ஆகும். இந்தியாவில் இந்த ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.1,29,900-ஆக உள்ளது.

மேலும் இந்த ஐபோன் ஆர்டர் செய்த பெண், அடுத்த நாளில் டெலிவரி செய்யுமாறு கூறியுள்ளார்.ஆனால் போக்குவரத்து
நெரிசலில் மாட்டிக் கொண்டதால், குறிப்பிட்ட தேதியில் ஐபோனை டெலிவரி செய்ய முடியாது என்று டெலிவரி பாய்கூறியுள்ளார். அதன்படி 2 நாட்கள் கழித்து தான் அந்த பெண்ணுக்க பார்சல் வந்துள்ளது.

உடனே அந்த பார்சலை பிரித்து பார்த்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் என்னவென்றால், அந்த பார்சலில் ஆப்பிள் ஐபோனுக்கு பதிலாக, ஹெண்ட் வாஷ் இருந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த பெண் ஆர்டர் செய்த ஆன்லைனின் தளத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு நடந்த விசாரணையில், ஆப்பிள் ஐபோனை டெலிவரி செய்யும் போது தான் இந்த மோசடி நடந்துள்ளது எனதெரியவந்துள்ளது. குறிப்பாக கௌலா லாஃப்கெய்லி ஐபோன் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது, அவர் வீட்டில் இருந்தபோதும், கதவை தட்டாமலே வீடு பூட்டியிருப்பதாக டெலிவரி செய்யும் நபர் கூறியிருப்பதும் விசாரணையில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அந்த பெண் ஆப்பிள் ஐபோனுக்கு முழுவதுமாக பணம் செலுத்தவில்லை என்றாலும் கூட, டெலிவரி செய்த நபர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஹெண்ட் வாஷ்-க்கு பதிலாக, தனது ஐபோனை கொடுக்கும்படி கௌலா லாஃப்கெய்லி பார்சல் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.. குறிப்பாக ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கும் போது மிகவும்கவனமாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக