Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 பிப்ரவரி, 2022

சீன செயலிகள் தடையால் இந்தியாவுக்கு ஏகப்பட்ட நன்மை..!

 சீன செயலிகள் தடை

இந்தியா - சீன எல்லை பிரச்சனைக்குப் பின்பும் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் இயங்கி வரும் சீன மொபைல் செயலிகளைத் தனிநபர் தகவல் பாதுகாப்புக் காரணமாக அடுத்தடுத்துத் தடை செய்து வருகிறது.

இந்தத் தடை உத்தரவால் இந்தியாவுக்கும், இந்திய மொபைல் செயலி நிறுவனங்களுக்கும் பல்வேறு வாய்ப்புகளும், நன்மைகளும் உருவாகியுள்ளது.

சீன செயலிகள் தடை

2020ஆம் ஆண்டிலேயே 100க்கும் அதிகமாக மொபைல் செயலிகள் பல கட்டங்களாகத் தடை செய்யப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பும் மீண்டும் 54 சீன செயலிகளைத் தடை செய்யப்பட்டது. இந்த 54 செயலிகள் நேரடியாக மற்றும் மறைமுகமாக சீனா உடனும், சீன நிறுவனங்களுடனும் தொடர்பில் உள்ளது.

ஷாட் வீடியோ செயலிகள்

2020ஆம் ஆண்டில் டிக்டாக் போன்ற பல செயலிகளைத் தடை செய்ததன் மூலம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பல ஷாட் வீடியோ செயலிகள் மிகப்பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களைப் பெற்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது, அந்த வகையில் தற்போது இந்தியாவில் இருக்கும் கேமிங் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

பப்ஜி மொபைல், ப்ரீ பையர்

2020ல் மத்திய அரசு பப்ஜி மொபைல் செயலியை தடை செய்த போது, பப்ஜி வாடிக்கையாளர்கள் அனைவரையும் ப்ரீ பையர் கைப்பற்றியது. இதனால் இந்திய நிறுவனத்திற்கு வாய்ப்பு இல்லாமல் போனது, இந்த நிலையில் கடந்த வாரம் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 54 செயலிகளில் Garena Free Fire Illuminate செயலியும் இருந்த காரணத்தால் இந்தியாவின் கேமிங் துறை நிறுவனங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது.

5 பில்லியன் டாலர்

BCG மற்றும் Sequoia Capital ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் கேமிங் துறையானது தற்போது 1.5 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை ஈட்டி வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் சந்தையாக மூன்று மடங்கு வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளது.

இந்திய கேமிங் நிறுவனங்கள்

தற்போது ப்ரீ பையர் போன்ற முன்னணி கேமிங் செயலி தடை செய்யப்பட்டு உள்ள காரணத்தால் இந்த 5 பில்லியன் டாலர் இலக்கை வேகமாக அடையும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இது இந்திய கேமிங் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக