Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

உங்கள் ஸ்மார்ட்போனை டிவி ரிமோட்டாகவும் பயன்படுத்துவது எப்படி? ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு டிப்ஸ்..

 ஆண்ட்ராய்டு டிவியை உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் கட்டுப்படுத்த முடியுமா?


உங்கள் வீட்டில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி இருக்கிறதா? உங்கள் ரிமோட் கைக்கு அருகில் இல்லையா? கவலைப்பட வேண்டாம், எப்படியும் உங்கள் கைகளில் அல்லது கைக்கு அருகில் உங்கள் ஸ்மார்ட்போன் நிச்சயமாக இருக்கும் என்று நம்புகிறோம். அப்படி உங்கள் கைக்கு அருகில் ஸ்மார்ட்போன் இருந்தால், அதை சில நிமிடங்களில் டிவி ரிமோட்டாக மாற்றம் செய்து பயன்படுத்தலாம். உண்மையாகத் தான் சொல்கிறோம், உங்களுடைய ஸ்மார்ட்போனை இப்போது நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவிக்கான ரிமோட்டாக பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு டிவியை உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் கட்டுப்படுத்த முடியுமா?

கூகுள் அசிஸ்டண்ட்டைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் உள்ளடக்கத்தைத் தேடுவதற்கு, பெரும்பாலான ஆண்ட்ராய்டு டிவி சாதனங்கள் வாய்ஸ் கண்ட்ரோல் இயக்கப்பட்ட ரிமோட்டுடன் வருகின்றது. இருப்பினும், பல நேரங்களில் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் நீங்கள் ரிமோட்டைப் பயன்படுத்த விரும்பாமல் இருக்கலாம், அதற்குப் பதிலாக உங்கள் ஆண்ட்ராய்டு டிவியை உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் கட்டுப்படுத்துவது மிகவும் வசதியாக இருக்கும் என்பதனால் இந்த ட்ரிக்கை பரிந்துரைக்கிறோம்.

ஆண்ட்ராய்டு டிவி ரிமோட் கண்ட்ரோல் ஆப்ஸ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உதாரணமாக, ஆண்ட்ராய்டு டிவியில் தட்டச்சு செய்வது ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்துவதை விட உங்கள் ஸ்மார்ட்போனை ரிமோட்டாகப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. ரிமோட் கண்ட்ரோல் சரியாகச் செயல்படுவதை நிறுத்தினால், உங்கள் Android டிவியை வழிநடத்தவும், பயன்படுத்தவும் இனி உங்களுடைய ஸ்மார்ட்போனை நீங்கள் உங்களுக்காகப் பயன்படுத்தலாம். இதை நீங்கள், ஆண்ட்ராய்டு டிவி ரிமோட் கண்ட்ரோல் ஆப்ஸ் மூலம் எளிமையாகச் செய்து முடிக்கலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் முன்பு அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு டிவி ரிமோட் ஆப்ஸ் பதிவிறக்கம் செய்யக் கிடைத்தது.

புதிய Google TV ஆப்ஸ் உடன் வரும் டிவி ரிமோட் அம்சம்

இருப்பினும், தேடுபொறி நிறுவனமான கூகிள், ஆண்ட்ராய்டு டிவி ரிமோட்டை ஆப்ஸை அதன் கூகுள் டிவி பயன்பாட்டில் இப்போது இணைத்துள்ளது. இது முன்பு கூகுள் ப்ளே மூவீஸ் மற்றும் டிவி என அறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த உங்களுடைய ஸ்மார்ட்போன் Android 4.3 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்க வேண்டும். மேலும், Google TV ஆப்ஸ் பதிப்பு 4.27.8.93 அல்லது அதற்குப் பிறகு வெளியான பதிப்பில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

Google TV ஆப்ஸை எப்படி பதிவிறக்கம் செய்வது?

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் டிவி ஆப்ஸை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், உங்கள் ஃபோனில் முன் நிறுவப்படவில்லை என்றால், நீங்கள் அதை APK மிரர் வழியாக கூட பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த ஆப்ஸை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு டிவி சாதனத்தை ஸ்மார்ட்போன் வழியாகக் கட்டுப்படுத்துவது எளிதான ஒரு வழியாகும். இந்த பயன்பாடு iOS மற்றும் Android தொலைப்பேசிகள் இரண்டிற்கும் இலவசமாகக் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டில் இயங்கும் டிவிகள், செட்-டாப் பாக்ஸ்கள், ஸ்ட்ரீமிங் ஸ்டிக்ஸ் மற்றும் பிற சாதனங்களுடன் வேலை செய்கிறது.

GOOGLE TV பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது?

  • உங்களுடைய ஆண்ட்ராய்டு போனில் முதலில் கூகுள் டிவி ஆப்ஸைத் திறக்க வேண்டும்.
  • கீழே ஸ்க்ரோல் செய்து, டிவி ரிமோட் என்று காணப்படும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • இப்போது, ​​சாதனங்களுக்கான ஸ்கேனிங் விருப்பத்தைத் தட்ட வேண்டும், அது ஸ்கிரீனில் மேல் பகுதியில் இருக்கும்.
  • உங்கள் சாதனம் ஸ்கேன் பட்டியலில் தோன்றும்.
ஆறு எழுத்துக் குறியீட்டை டைப் சரியாக செய்ய வேண்டுமா? 
 
நீங்கள் வெறுமனே அதைத் தேர்வு செய்ய வேண்டும். 
உங்கள் ஆண்ட்ராய்டு டிவியை ஆன் செய்த பிறகு, ஆறு எழுத்துக் குறியீட்டைக் கவனியுங்கள்.
 
கடைசியாக, கூகுள் டிவி பயன்பாட்டில் மேற்கூறிய குறியீட்டை உள்ளிட வேண்டும்.
 
மேலும், உங்கள் ஆண்ட்ராய்டு டிவியின் அதே Google கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் Google TV பயன்பாட்டில் உள்நுழைய வேண்டிய அவசியமில்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
 
Google TV ஆப்ஸில் என்னென்ன அம்சங்கள் உள்ளது? 
 
இதற்கு பின் நீங்கள் Google TV பயன்பாட்டிற்குள் ரிமோட்டைப் பயன்படுத்தத் தொடங்கலாம் மற்றும் இணைத்த பிறகு உங்கள் Android TVயைக் கட்டுப்படுத்தலாம். மேலும், இடைமுகத்தை வழிசெலுத்துவது போன்ற பல பணிகளை நீங்கள் இந்த ஆப்ஸ் மூலம் ஸ்மார்ட்போனில் இருந்தே செய்யலாம். அதேபோல், ஆப்ஸைத் தொடங்கவும், உள்ளடக்கத்தைத் தேடவும், ரிமோட்டைப் பயன்படுத்தி உங்கள் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட்டை வரவழைக்கலாம். விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து நீங்கள் ஸ்வைப் கட்டுப்பாடுகள் அல்லது மெய்நிகர் டி-பேடைப் பயன்படுத்தலாம்.
 
அடிக்கடி Google TV ஆப்ஸை ஓபன் செய்யாமல் ஸ்மார்ட்போன் ரிமோட்டை பயன்படுத்த முடியுமா?
 
ஸ்மார்ட்போனில் அடிக்கடி ரிமோட்டைப் பயன்படுத்துவதற்கு Google TV பயன்பாட்டைத் திறக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். உங்கள் ஸ்மார்ட்போனில் கூகிள் டிவி அணுகலுடன் இணைக்கப்பட்ட ரிமோட்டை குயிக் செட்டிங்ஸ் டைலில் பொருத்துவதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம். இது கூகுள் டிவி ஆப்ஸைத் திறக்காமலேயே, உங்கள் தேவைக்கு ஏற்ப ஆண்ட்ராய்டு டிவி ரிமோட் சேவையை உடனடியாக உங்கள் போனில் அணுக அனுமதி வழங்குகிறது.
 
ரிமோட்டிற்கான குயிக் செட்டிங்ஸ் ஷார்ட்கட்ஸ் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் 
 
இந்த புதிய முறையின் குறிப்பிடத்தக்க நன்மைகளில் இதுவும் ஒன்றாகும். இதைச் செய்ய, உங்கள் குயிக் செட்டிங்ஸ் ஷார்ட்கட்ஸ்களைத் திருத்த வேண்டும். அடுத்து, நீங்கள் விருப்பங்களை உலாவ வேண்டும் மற்றும் உங்களுக்குப் பிடித்த இடத்தில் டிவி ரிமோட் விருப்பத்தை இழுத்துப் பிடித்து டிராக் செய்து நிறுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் முதலில் கூகுள் டிவி பயன்பாட்டிற்குச் சென்று, குயிக் செட்டிங்ஸில் தோன்றுவதற்குத் தேவையான செட்டிங்ஸை அமைக்க வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
 
iOS பயனர்களுக்கு இந்த சேவை மட்டும் இன்னும் வெளிவரவில்லையா? 
 
வருந்தத்தக்க வகையில், iOS பயனர்களுக்கு Google TV பயன்பாட்டில் Google TV ரிமோட் அம்சம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், கூகிள் டிவி ஆப்ஸ் பயன்படுத்தக் கிடைக்கிறது. இருப்பினும், இது எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது என்பதனால் விஷயத்தைத் தெரிந்துகொள்வது சிறப்பானது. உங்கள் Android TVயின் ஒலியளவை அதிகரிக்க அல்லது குறைக்க உங்கள் iPhone இல் Google Home பயன்பாட்டை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் டிப்ஸ்.
 
GOOGLE TV ரிமோட் பயன்பாட்டைப் பயன்படுத்தி ANDROID TVயை எப்படி இயக்கலாம்? 
 
உங்கள் டிவியை ஆன் அல்லது ஆஃப் செய்ய உங்கள் ஃபோனைப் பயன்படுத்தலாம் என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு டிவிகளில் மட்டுமே இது வேலை செய்யும். உங்கள் டிவி HDMI-CEC ஐ ஆதரித்தால் மட்டுமே இந்த அம்சத்தை உங்களால் பயன்படுத்த முடியும், இது இயல்பாகவே வழக்கமாக முடக்கப்படும். இருப்பினும், நீங்கள் அமைப்புகளில் இருந்து HDMI-CEC ஐ இயக்கலாம். இது டிவிக்கு டிவி மாறுபடலாம். ரிமோட்டைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு டிவியை ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியும்.
 
கூகுள் அசிஸ்டண்ட் மூலம் உங்கள் டிவியை ஆன் மற்றும் ஆஃப் செய்வது எப்படி?

அதேபோல், உங்கள் டிவியை ஆன் அல்லது ஆஃப் செய்ய மொபைலின் கூகுள் அசிஸ்டண்ட் ஆப்ஸை கூட நீங்கள் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை ஆன் செய்ய நீங்கள், "Hey Google, turn on the TV" என்று மட்டும் சொல்ல வேண்டும். இருப்பினும், உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட டிவி உள்ளது, அதை இயக்க விரும்பும் டிவியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, "Hey Google, turn on the Living Room TV" என்று நீங்கள் குறிப்பிட வேண்டும். இந்த முறையைப் பின்பற்றி நீங்கள், உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருந்த இனி உங்கள் ஸ்மார்ட் டிவியை கட்டுப்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக