Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 மார்ச், 2022

4.75 லட்சம் கார்களை திரும்பப் பெறும் முடிவை டெஸ்லா ஏன் எடுக்க வேண்டும்?

அமெரிக்காவின் எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதன் சிறப்பான செயல்திறனுக்காக அறியப்படுகிறது, ஆனால் சில நேரங்களில் நிறுவனத்தின் கார்களில் கோளாறுகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன.

அப்படிப்பட்ட ஒரு புகாருக்காக, டெஸ்லா நிறுவனம் தற்போது, தனது உற்பத்தியில் 4.75 லட்சம் கார்களை சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.

475,000 மாடல் 3 சோடன் மற்றும் மாடல் எஸ் மின்சார கார்களை டெஸ்லா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அமெரிக்க பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. 

மாடல் 3 செடான்களுக்கான இந்த கார்களில் பொருத்தப்பட்டுள்ள ரியர்வியூ கேமராக்கள் பழுதடைந்து விபத்து அபாயத்தை அதிகரிக்கும் என்று அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) தெரிவித்துள்ளது.

இப்படியொரு இக்கட்டான சூழலில் தான் டெஸ்லா நிறுவனம் தனது விற்பனையான கார்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

சீனாவிலும் டெஸ்லா கார்களில் கோளாறுகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. டெஸ்லா இன்க் இறக்குமதி செய்யப்பட்ட 19,697 மாடல் எஸ் வாகனங்களையும், இறக்குமதி செய்யப்பட்ட மாடல் 3 கள் 35836 மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட 144,208 மாடல் 3 வாகனங்களையும் திரும்பப் பெறுவதாக சீனாவின் சந்தைக் கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.

சந்தை ஒழுங்குமுறைக்கான மாநில நிர்வாகத்தின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இடுகையின் படி, இந்த டெஸ்லா கார்கள் எதிர்காலத்தில் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

டெஸ்லா கார் நிறுவனம் EV துறையில் புதுமையான கண்டுபிடிப்புகள், எதிர்காலத்திற்கு ஏற்ற அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை ஈர்க்க தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள் உள்ள காரை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், விற்பனைக்கு பிந்தைய சேவையும் மிக முக்கியம். இல்லை என்றால், அதுவே பெரும் தோல்விக்கு காரணமாகி விடும். இதனால்தான், டெஸ்லா 4.75 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது.

திரும்பப் பெறும் கார்,குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த மின்சார கார்கள் சந்தையில் இருந்து திரும்ப பெறப்படும்.

மேலும் படிக்க | Maruti Celerio CNG அறிமுகம் ஆனது: இந்த காரை வாங்கினால் எக்கச்சக்கமாக மிச்சபப்டுத்தலாம்

டெஸ்லா தான் உலகிலேயே அதிகம் கூகுள் செய்யப்பட்ட EV பிராண்ட் ஆகும். இதில் மாடல் 3 காம்பாக்ட் செடான் தான் சர்ச் இன்ஜினில் அதிகம் தேடப்பட்ட மின்சார கார் ஆகும். 

டெஸ்லா மாடல் எஸ், மாடல் ஒய் மற்றும் மாடல் எக்ஸ் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ள மற்ற டாப் எலக்ட்ரிக் கார்கள் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. ஆடி இ-ட்ரான் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

டெஸ்லா மாடல் 3 ஒவ்வொரு மாதமும் 22.40 லட்சம் முறை தேடப்பட்டதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்குப் பிறகு, மாடல் S 1,500,000 முறையும், மாடல் Y 1,220,000 முறையும், மாடல் X 1220,000 முறையும் தேடப்பட்டது. மறுபுறம் Audi e-tron கூகுளில் 1,000,000 முறை தேடப்பட்டது.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக