ஆப்பிள் அலுவலகத்தில் வெள்ளை தூள் உடன் இருந்த கவர் கீழே கிடந்ததையடுத்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். விரைவில் இந்த நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பிரதான முன்னணி நிறுவனம்
தொழில்நுட்பத் துறையில் பிரதான முன்னணி நிறுவனமாக இருப்பது ஆப்பிள். இந்நிறுவனத்தின் அலுவலகம் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்திருக்கிறது. கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் வளாகத்தில் ஒரு வெள்ளைப் பொடியுடன் கூடிய கவர் ஒன்று கிடந்திருக்கிறது. இதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து சாண்டா கிளாரா கவுண்டி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அவசர கால பணியாளர்கள் விரைந்தனர்
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு அவசர கால பணியாளர்கள் விரைந்தனர். அந்த வெள்ளை துகள் இருந்த கவர் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த வெள்ளைத் துகள் ஆபத்தானது இல்லை என தெரிவித்தனர். இருப்பினும் இந்த வெள்ளை துகள் இருந்த கவர் என்ன என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வெள்ளை துகள் இருந்த கவர் மூலம் ஆப்பிள் அலுவலகத்தில் பெரிய களேபரமே ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளை தூள் உடன் இருந்த கவர்
இதுகுறித்த என்பிசி பே ஏரியாவின் அறிக்கைப்படி, முதலில் ஊழியர்கள் வெள்ளை தூள் இருந்த கவரை கண்டறிந்தனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்த சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்தனர். மேலும் கவரை கண்ட உடனே ஆப்பிள் அலுவகத்தில் இருந்த ஊழியர்கள் வெளியேறிவிட்டனர். சிறிது நேரத்தில் இந்த நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஊழியர்கள் மீண்டும் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் தற்போது வரை அந்த துகள் என்ன என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அபாயகரமான பொருட்கள் இல்லை
தி வெர்ஜ் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, கவருக்குள் இருந்த வெள்ளை நிற துகள் அபாயகரமான பொருட்கள் இல்லை என அதிகாரிகள் முடிவு செய்திருக்கின்றனர் என ஆப்பிள் ஊழியர்களிடம் குறிப்பிட்டது. ஆப்பிள் பார்க் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாவும் 'விரைவில் அனைத்து பிரிவுகளும் திறக்கப்பட்டுள்ளன' எனவும் மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் நிறுவனம்
வொர்க் ஃப்ரம் ஹோம் முடிவுக்கு வந்து ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டியது இருந்தது. தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் முடிந்து ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர். 'உங்களில் பலருக்கு அலுவலகத்திற்குத் திரும்புவது என்பது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மைல்கல் மற்றும் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் சக ஊழியர்களுடன் இணைந்து முழுமையாக ஈடுபட முடியும் இவைகளை நான் அறிவேன் என டிம் குக் குறிப்பிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக