-----------------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு..!!
-----------------------------------------------------------
சரண் : உங்க மனைவி கிணத்துல விழுந்து தத்தளிக்கும்போது கூட நீங்க ஏன் காப்பாத்தல?
அருண் : என்னைய உணர்ச்சிவசப்படக்கூடாது-ன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..
சரண் : 😐😐
-----------------------------------------------------------
மாலா : உன் கணவரை எதுக்கு கோபமா திட்டுன?
சீலா : நான் போன் பண்ணுனா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்காரு.. அதான்.
மாலா : 😅😅
-----------------------------------------------------------
இது குற்றமா?
-----------------------------------------------------------
💁 அன்னைக்கு ஒருநாள் எங்க வீட்டு மிக்சி வேலை செய்யலைன்னு பக்கத்து வீட்டுக்கு போயி மிக்சி கேட்டேன்..
💁 இங்கேயே மிக்சியை யூஸ் பண்ணிக்கோன்னு சொன்னாங்க..
💁 அடுத்தநாள் பக்கத்து வீட்டுக்காரங்க எங்க வீட்டுல வந்து துடைப்பம் கேட்டாங்க..
💁 நான் இங்கேயே கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன்..
💁 அதுக்கு போயி அவங்க என்மேல கோவிச்சுக்கிட்டு மொறச்சு பாத்துட்டு போயிட்டாங்க..
💁 நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? அவங்க சொன்னத தான நானும் சொன்னேன்..
-----------------------------------------------------------
உங்களுக்கும் இந்த டவுட் இருக்கா?
-----------------------------------------------------------
⚡ கரண்ட தொட்டாலே ஷாக் அடிக்குது.. அப்படின்னா எப்படி அதை தொடாம கண்டுபிடிச்சுருக்க முடியும்? ஒன்னும் புரியலையே..!! 🤔🤔
-----------------------------------------------------------
விடுகதைகள்..!!
-----------------------------------------------------------
1. பெட்டியை திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?
2. சல சல என சத்தம் போடும். ஆனால், பேச மட்டும் வராது. அது என்ன?
3. நடக்க முடியாது. ஆனால், நகராமல் இருக்காது. அது என்ன?
4. பார்க்க கல்லானவன், கடிக்க இனிமையானவன். அவன் யார்?
விடைகள் :
🥥 தேங்காய்.
🍂 காய்ந்த இலைகள்.
⏰ கடிகாரம்.
🍬 கற்கண்டு.
-----------------------------------------------------------
முயற்சியா? முடிவா?
-----------------------------------------------------------
👉 சிறையில் வாழ்வதும்.. சிறகடித்து பறப்பதும் உன் கையில்தான் உள்ளது..
முயற்சிகளை விட, முடிவுகளை எதிர்பார்க்கும் உலகம் இது..
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக