Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 மார்ச், 2022

ஃப்ரீலான்சிங் சார்ந்த வேலைகளை ஏன் பலர் தேர்வு செய்வதில்லை? இதற்கான காரணம் என்ன?

பொதுவாக வேலைகளில் இரண்டு வகை உள்ளது. ஒன்று அலுவலத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு வேலை செய்வது. இன்னொன்று வீட்டில் இருந்த படியே ஃப்ரீலான்சிங் போன்ற வேலைகளை செய்து வருவது. இன்றைய கால கட்டத்தில் பல விதமான வேலைகள் வந்துவிட்டன. ஆனால், அதற்கான திறன்களை பெரும்பாலும் நாம் வளர்த்து கொள்வதில்லை என்பது தான் உண்மை. நமது ஆர்வத்திற்கு ஏற்ப பல துறைகளும் வளர்ந்து வருகின்றன. அவற்றை பொருத்து நமக்கான பணியை நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம். பெரும்பாலும் ஃப்ரீலான்சிங் சார்ந்த வேலைகளை அதிக பேர் தேர்வு செய்வதில்லை. இதற்கான முழு காரணத்தையும், இதை பற்றிய மேலும் விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மாதா மாதம் வருமானம் நிலையற்றது :

பொதுவாக ஃப்ரீலான்சிங் செய்பவர்களுக்கு சம்பளம் இல்லாமல் இருப்பது சார்ந்த பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஃப்ரீலான்ஸிங்கில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், உங்கள் சம்பளத்தொகை அல்லது வருமானம் நிலையாகவோ அல்லது அது வரப்போகும் தேதியோ சரியாக தெரியாது. மேலும் ஒருவேளை சில மாதங்களுக்கு சம்பளம் அல்லது வருமானம் வரவில்லை என்றால் அது பெரிய சிக்கலை ஏற்படுத்த கூடும். இதனாலேயே பலர் ஃப்ரீலான்சிங் பணிகளை தேர்வு செய்வதில்லை.

வேலை நேரங்கள் : 

அலுவலக பணிகள் என்றால் அந்த குறிப்பிட்ட நேரங்களில் வேலை செய்தால் போதும். ஆனால், இதுவே ஃப்ரீலான்சிங் பணிகளில் சரியான வேலை நேரம் இருப்பதில்லை. அதே போன்று அலுவலக வேலைகளில் சில நாட்களில் அதிக நேரம் வேலை பார்த்தாலும், வார இறுதிகளில் ஓய்வு எடுத்து கொள்ளலாம். இது போன்ற விடுமுறைகள் எதுவும் ஃப்ரீலான்சிங் வேலைகளில் இருப்பதில்லை. எனவே இது உங்களுக்கான நேரத்தையும், உங்கள் வார இறுதிகளையும், உங்கள் ஓய்வு நேரத்தையும் அழிக்கக்கூடும். எனவே தான் ஃப்ரீலான்சிங் வேலைகளை கண்டு பலர் ஒதுங்கி விடுகின்றனர்.

பணம் வருமா வராதா என்ற நிலை : 

பல சந்தர்ப்பங்களில் ஃப்ரீலான்சிங் செய்பவர்களுக்கு வரவேண்டிய பணம் சரியான நேரத்தில் வருவதில்லை. உங்களின் ஏஜென்சி சரியாக பணம் செலுத்தவில்லை என்றால் நீங்கள் அவர்களை மீண்டும் தேர்வு செய்ய மாட்டீர்கள். நீங்கள் ஒப்பந்த அடிப்படையில் இல்லாததால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படுகிறது. மேலும் இதனால் நம்பிக்கை இல்லாத தன்மை உருவாகி விடுகிறது.

பணம் செலுத்தும் முறை : 

நமது வங்கி கணக்கில் யாராவது பணத்தை டெபாசிட் செய்யும் போதும், பண பரிவர்த்தனை சீராக நடக்கும் போதும், பணம் எங்கிருந்து வந்தது என்பதை அவர்களுக்குத் தெரிவிக்குமாறு வருமான வரித் துறை கூறுகிறது. எனவே இதனால் வரிகளிலிருந்து உங்களைக் காப்பாற்ற முடியும். ஃப்ரீலான்சிங் வேலைகளில் இந்த சிக்கல் உள்ளதால், பலர் இதை தவிர்த்து விடுவார்கள்.

பாதுகாப்பு இல்லாத நிலை : 

கொரோனா தொற்றுநோய் காலங்களில், ​​பல ஃப்ரீலான்ஸர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஃப்ரீலான்சிங் செய்ய கூடிய தொகையை குறைக்கச் செய்தனர். அதே போன்று கொரோனா காலத்தில் பலரை வேலையில் இருந்து அதிரடியாக நீக்கினர். மேலும் ஊழியர்களுக்கு விடுமுறை, பிபிஎஃப், ஓய்வூதியம் போன்றவை ஃப்ரீலான்சிங் பணிகளில் இருப்பதில்லை. இவற்றால் தான் ஃப்ரீலான்சிங் பணிகளை பலர் தேர்வு செய்வதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக