Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 மார்ச், 2022

காரின் ஏர் ஃபில்டர் சரியா வேலை செய்யலனா என்ன ஆகும் தெரியுமா? இதெல்லாம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அழுக்கு மற்றும் குப்பைகள் காரின் இன்ஜினுக்குள் நுழைவதை ஏர் ஃபில்டர் (Air Filter) தடுக்கிறது. பெரும்பாலான ஏர் ஃபில்டர்கள் பேப்பர் மற்றும் சிந்தடிக் ஃபைபர்களின் கலவையில் உருவாக்கப்படுகின்றன. இன்ஜினுக்கு தீங்கு விளைவிக்க கூடிய துகள்களை தடுத்து நிறுத்தும் பணியை இந்த ஏர் ஃபில்டர்கள் செய்கின்றன

ஏர் ஃபில்டர் சரியாக வேலை செய்யாவிட்டால், அழுக்கு மற்றும் குப்பைகள் இன்ஜினுக்குள் சென்று விடும். இது நடந்து விட்டால், பின் விளைவுகள் உங்களுக்கு அதிக செலவு வைக்க கூடியதாக இருக்கும். 5 முதல் 6 மைக்ரான்கள் அளவுடைய அல்லது அதற்கும் மேற்பட்ட அளவுடைய துகள்களை ஏர் ஃபில்டர்கள் பிடித்து விடும்.

இதைக்காட்டிலும் சிறிய மைக்ரான்கள் அளவுடைய துகள்களை கூட 80 முதல் 90 சதவீதம் வரை தடுத்து நிறுத்தி விடக்கூடிய திறன் ஏர் ஃபில்டர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதிக தரம் வாய்ந்த ஏர் ஃபில்டர்கள், அசுத்தங்களை 99 சதவீதம் வரை ஃபில்டர் செய்து விடும். அதிக தீங்கு விளைவிக்க கூடிய மாசுக்களை கூட இந்த ஏர் ஃபில்டர்கள் இன்ஜினுக்கு வெளியே வைத்திருக்கும்.

ஏர் ஃபில்டர்களை சரியாக பொருத்தாவிட்டாலோ அல்லது தவறான ஏர் ஃபில்டர்களை பொருத்தினாலோ, உங்கள் இன்ஜினை அழுக்கு மற்றும் குப்பைகளுக்கு திறந்து விட்டது போலாகி விடும். இதன் காரணமாக இன்ஜினுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம். இதை சரி செய்வதற்கு அதிக செலவு ஆகும் என்பது மனதில் வைக்க வேண்டிய விஷயம்.

ஏர் ஃபில்டர் சரியாக வேலை செய்யாவிட்டால், டர்போசார்ஜர் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே டர்போசார்ஜ்டு இன்ஜின்களுக்கு ஏர் ஃபில்டர்கள் மிகவும் முக்கியமானது. இன்ஜினின் செயல்திறனை மேம்படுத்தும் பணியை டர்போசார்ஜர்கள் செய்கின்றன. டர்போசார்ஜரின் ஒரு பக்கம், அதாவது இம்பெல்லர் பக்கமானது, இன்ஜினின் ஏர் இன்டேக் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஏர் ஃபில்டர் சரியாக வேலை செய்யாவிட்டால், அழுக்கு மற்றும் குப்பைகள் டர்போசார்ஜருக்கு உள்ளே மிக எளிதாக நுழைந்து விடும். இதன் காரணமாக டர்போசார்ஜர் மற்றும் இன்ஜின் செயல் இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதுதவிர ஏர் ஃபில்டர் சரியாக இயங்காவிட்டால், இன்ஜினில் மேலும் ஒரு சில பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

இன்ஜினுக்கு உள்ளே பிஸ்டன் இயங்கும்போது, காற்று உறிஞ்சப்படும். எனவே ஏர் ஃபில்டர் சரியாக வேலை செய்யாவிட்டால், காற்றுடன் அழுக்கு மற்றும் குப்பைகளையும் இன்ஜின் உறிஞ்சுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக இன்ஜினுக்கு உள்ளே இருக்கும் பாகங்களான வால்வுகள், பிஸ்டன்கள் மற்றும் சிலிண்டர் வால்கள் போன்றவவை சேதம் அடையலாம்.

இது நடக்கும்பட்சத்தில், இன்ஜின் அதிக எரிபொருளை நுகரும். எனவே உங்கள் காரின் மைலேஜ் குறையும். இதன் காரணமாக எரிபொருளுக்காக நீங்கள் செலவிடும் தொகை அதிகரிக்கும். அத்துடன் இன்ஜினின் செயல்திறன் குறைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இன்ஜின் செயல் இழப்பதற்கான அபாயமும் இருக்கிறது.

ஏர் ஃபில்டரை முறையாக பராமரிப்பதுதான், அழுக்கு மற்றும் குப்பைகளில் இருந்து உங்கள் கார் இன்ஜினை பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த வழி. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஏர் ஃபில்டர்களை மாற்றுவதும் மிக அவசியமானது. அதே நேரத்தில் அனைத்து ஏர் ஃபில்டர்களும் தரமானவை கிடையாது என்பதையும் மனதில் வையுங்கள்.

எனவே உங்கள் காருக்கு பொருந்த கூடிய தரமான ஏர் ஃபில்டரை வாங்குவது மிகவும் முக்கியமானது. அதிக தரம் மிக்க ஏர் ஃபில்டர்கள் உங்கள் கார் இன்ஜினுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கும். குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரம் இல்லாத ஏர் ஃபில்டர்களை வாங்காதீர்கள். இது இன்ஜினுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், அடிக்கடி மாற்ற வேண்டிய சூழலும் ஏற்படலாம்.

எனவே சற்று விலை அதிகம் என்றாலும் தரமான ஏர் ஃபில்டர்களை வாங்குங்கள். மலிவான விலையில் கிடைக்கும் தரமற்ற ஏர் ஃபில்டர்களை வாங்குவதன் மூலம் நீங்கள் சேமிக்க கூடிய தொகை மிகவும் குறைவாகதான் இருக்கும். ஆனால் இன்ஜினில் பாதிப்பு ஏற்பட்டு விட்டால், நீங்கள் மிகப்பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியதிருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக