Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 மார்ச், 2022

பன்றியின் இருதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர் காலமானார்..வரலாற்று திருப்பம் 2 மாதத்தில் முடிந்தது..

உலக வரலாற்றில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மனித உடலில் பொருத்தி, அதைச் சீராக இயக்கச் செய்து, உயிருடன் வாழ்ந்த பெருமைக்குச் சொந்தக்காரர் டேவிட் பென்னட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த மாபெரும் சாதனை வரலாறு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. ஆம், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பெற்ற முதல் நபராக வரலாறு படைத்த 57 வயதுடைய முதியவர், இதய நோயால் பாதிக்கப்பட்ட மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் (UMMC) செவ்வாய்க்கிழமை காலமானார்.

பன்றியின் இருதயம் மனிதனுக்குப் பொருந்துமா?

ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாகப் பன்றிகளை மாற்று உறுப்புகளின் சாத்தியமான ஆதாரமாகக் கருதுகின்றனர். இதற்கான முக்கிய காரணம், பன்றிகள் பல வழிகளில் மனிதர்களைப் போலவே இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உறுப்பு நிராகரிப்பை ஏற்படுத்திய மரபணு வேறுபாடுகள் அல்லது தொற்று அபாயத்தை ஏற்படுத்தும் வைரஸ்கள் காரணமாகப் பன்றியிலிருந்து மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சையின் முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்தன.

உலக வரலாற்றில் முதல் முறையாக பன்றியிடம் இருந்து மனிதனுக்குப் பெறப்பட்ட இருதயம்

ஆனால், டேவிட் பென்னட் என்பவரின் கதையில் இது விசித்திரமானது. ஆம், டேவிட் பென்னட் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி அன்று இருதய மாற்று அறுவை சிகிச்சையைப் பெற்றார். இவருக்குப் பொருத்தப்பட்ட மாற்று இருதயம் பன்றியின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மனித உடலில் பொருந்தி கச்சிதமாகச் செயல்படும் வகையில் மரபணு மாற்றப்பட்ட செயல்முறைகளைப் பின்பற்றி இந்த இருதயம் உருவாக்கப்பட்டு, பின்னர் அது டேவிட் பென்னட் உடலுக்கு மாற்றப்பட்டது.

மாற்று அறுவை சிகிச்சைக்குத் தகுதியற்றவராக இருந்த டேவிட் பென்னட்

பென்னட் முதன்முதலில் அக்டோபரில் நோயாளியாக UMMC மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். டேவிட் பென்னட் மருத்துவமனைக்கு வந்த பின்னர், அவரின் இருதய கோளாறுகள் சோதனை செய்யப்பட்டு இதய நுரையீரல் பைபாஸ் இயந்திரத்தில் வைக்கப்பட்டார். ஆனால் வழக்கமான இதய மாற்று அறுவை சிகிச்சைக்குத் தகுதியற்றவராக டேவிட் பென்னட் கருதப்பட்டார். இருப்பினும் மருத்துவர்கள் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.

மருத்துவ வரலாற்றில் இது ஒரு 'அதிசய' நிகழ்வு

டேவிட் பென்னட் இடம் மருத்துவர்கள் மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம் பற்றிய தகவலைத் தெரிவித்தனர்.பென்னட் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இருதயத்தைப் பெற்று, மருத்துவ சோதனை மற்றும் அவரின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இருக்கும் வழியைத் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்தார். புதிய மரபணு எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி, இருதய நிராகரிப்பைத் தடுக்க மாற்றியமைக்கப்பட்ட ஒரு பன்றி இதயத்தைப் பெற்ற பிறகு பென்னட் உயிருடன் இருந்தார். அவரது மகன் இந்த செயல்முறையை 'ஒரு அதிசயம்' என்று அழைத்தார்.


இந்த செயல்முறையின் அபாயங்கள் குறித்து பென்னட் முன்பே அறிந்திருந்தாரா?

பென்னட்டைப் பொறுத்தவரை, இந்த செயல்முறை அவரது கடைசி விருப்பமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 'மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, திரு. பென்னட் செயல்முறையின் அபாயங்கள் குறித்து முழுமையாகத் தெரிவிக்கப்பட்டார். மேலும், இந்த செயல்முறை அறியப்படாத அபாயங்கள் மற்றும் நன்மைகளுடன் பரிசோதனை செய்யப்பட்டது' என்று மருத்துவமனை கூறியுள்ளது. இறுதியில், 'இது சாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டது'.

ஒன்பது வாரங்கள் குறைபாடற்ற முறையில் செயல்பட்ட பன்றியின் இருதயம்

மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உறுப்பை எங்களால் எடுத்து ஒன்பது வாரங்கள் குறைபாடற்ற முறையில் செயல்படுவதைப் பார்க்க முடிந்தது, இந்த சிகிச்சையின் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மிகவும் சாதகமானது' என்று டாக்டர் கிரிஃபித் கூறியுள்ளார். மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு அவர் அனுபவித்த இதய செயலிழப்பினால் ஏற்பட்ட பேரழிவு தரும் பலவீனத்தை பென்னட்டால் சமாளிக்க முடியவில்லை.

இரக்கமான நோய்த்தடுப்பு சிகிச்சையின் போது பென்னட் காலமானார்

இடமாற்றம் செய்யப்பட்ட இதயம் 'அழகாக' செயல்பட்டது என்று UMCC இதய மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் இயக்குனர் டாக்டர் பார்ட்லி கிரிஃபித் வீடியோ பதிவு செய்யப்பட்ட அறிக்கையில் கூறினார். ஆனால், பல நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. மருத்துவமனை புதன்கிழமை ஒரு அறிக்கையில் கூறியது. மேலும், அவர் குணமடைய மாட்டார் என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு அவருக்கு 'இரக்கமான நோய்த்தடுப்பு சிகிச்சை' வழங்கப்பட்டது. பென்னட் தனது இறுதி நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தது என்று மருத்துவமனை கூறியுள்ளது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக