Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 மார்ச், 2022

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் பச்சைமலை ஈரோடு

இந்த கோயில் எங்கு உள்ளது?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சைமலை என்னும் ஊரில் அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

ஈரோட்டிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் பச்சைமலை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ மற்றும் டேக்சி வசதி உள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

பழநி திருத்தலத்தைப் போன்று, இங்கும் மேற்கு நோக்கி அருள்கிறார் சண்முகக் கடவுள்.

மூலவரின் திருநாமம் சண்முகநாத ஸ்வாமி. வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியரும் தனிச்சன்னதியில் அருள்கிறார்.

இங்குள்ள மூலவரான முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

வேறென்ன சிறப்பு?

இங்கேயுள்ள வித்யா கணபதியும் விசேஷமானவர். இவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, தோப்புக்கரணமிட்டு வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம்.

மரகதவல்லி சமேத மரகதீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீதேவி-பூதேவி சமேத மரகத வேங்கடேச பெருமாள் ஆகியோர் தனிச்சன்னதியில் வீற்றிருக்கின்றனர்.

வித்யா கணபதி, தட்சிணாமூர்த்தி, பைரவர், மனைவியர் சமேதராக நவகிரகங்கள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

கந்த சஷ்டி, தைப்பூசம், காவடி எடுத்தல், திருக்கல்யாண வைபவம், முத்துப்பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை இக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

பத்து நாள் விழாவாக பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், வீட்டில் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கப் பெறவும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

வேண்டுதல்கள் நிறைவேறியதும் இங்குள்ள முருகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றியும், ருத்ராபிஷேகம் செய்தும், பன்னீரால் அபிஷேகம் செய்தும், பச்சை நிற வஸ்திரம் சாற்றியும், சிறப்பு அர்ச்சனை செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக