ஏர்டெல் வழங்கும் குறுகிய கால செல்லுபடியாகும் 400 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் திட்ட விவரங்களைப் பற்றித் தான் நாம் பார்க்கப்போகிறோம்.
ஏர்டெல் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்
பட்டியலில் உள்ள முதல் திட்டமானது ரூ. 155 செலவாகும் ப்ரீபெய்ட் திட்டமாகும். ஏர்டெல்லின் இந்த ரூ. 155 விலை திட்டமானது 24 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் மொத்தம் 1ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது.
இதேபோல், ஏர்டெல் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இது 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் காலத்திற்கு 2 ஜிபி டேட்டாவை வெறும் ரூ. 179 விலையில் அன்லிமிடெட் குரல் அழைப்பு நன்மை மற்றும் 300 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவை தினசரி டேட்டா நன்மை வழங்கும் திட்டங்கள் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.
ரூ. 400 விலைக்குள் கிடைக்கும் குறுகிய கால ரீசார்ஜ் திட்டங்கள்
ஏர்டெல் அதன் பயனர்களுக்கும் ரூ. 400 விலைக்குள் கிடைக்கும் குறுகிய கால செல்லுபடியாகும் பல 1ஜிபி தினசரி டேட்டா பேக்குகளை வழங்குகிறது. பட்டியலில் முதலாவதாக இருப்பது ரூ. 209 விலையில் வரும் திட்டமாகும். இந்த திட்டமானது அதன் பயனர்களுக்கு 21 நாட்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வருகிறது. இத்துடன் உங்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான இலவச சோதனை, Wynk மியூசிக் மற்றும் பலவற்றிற்கான அணுகல் உள்ளிட்ட கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது.
ஏர்டெல்லின் ரூ. 239 மற்றும் ரூ. 265 திட்டம்
ஏர்டெல்லின் அடுத்த பேக் ரூ. 239 திட்டமாகும், இது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 SMS நன்மைகளுடன் 24 நாட்களுக்கு மொத்த செல்லுபடியாகும் காலத்திற்குத் தினசரி 1GB டேட்டா நன்மையையும் வழங்குகிறது. ஏர்டெல்லின் பட்டியலில் உள்ள கடைசி திட்டம் ரூ. 265 விலையில் வருகிறது.
தினசரி 1ஜிபி டேட்டா நன்மை
இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 SMS நன்மை உடன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்திற்குத் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டமும் அமேசான் ப்ரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான இலவச சோதனை, Wynk மியூசிக் மற்றும் பலவற்றிற்கான அணுகல் உள்ளிட்ட கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது.
ஏர்டெல்லின் ரூ. 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள்
மேலும், ஏர்டெல் ரூ. 400க்கும் குறைவான சில திட்டங்களையும் வழங்குகிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் 1.5 ஜிபி டேட்டா திட்டத்தையும் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு வெறும் ரூ. 299 விலையில் வழங்குகிறது. அதேபோல், ஏர்டெல் 400 ரூபாய்க்குள் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ. 359 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டத்தையும், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு வெறும் ரூ.359 விலையில் வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் அமேசான் ப்ரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான இலவச சோதனை, Wynk மியூசிக் மற்றும் பலவற்றிற்கான அணுகல் உள்ளிட்ட கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக