>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 18 ஏப்ரல், 2022

    ஏன் வாழை இலையில் சாப்பிட வேண்டும்.? உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..

    தமிழர் பண்பாடு மற்றும் பழக்கவழக்கம் எல்லாமே வாழ்வியல் முறையோடு தொடர்புடையது. குறிப்பாக, உணவுப்பழக்கம், ஆரோக்கியம், நோயற்ற வாழ்வு ஆகியவற்றோடு இணைந்துள்ளது. 

    எந்த வகையான பாத்திரத்தில் சமைக்கிறோம் என்பது முதல், வாழை இலையில் பரிமாறப்படுவது வரை ஆரோக்கியத்தை முன்னிறுத்தியே உள்ளன. திருமணம் முதல் வீட்டு விசேஷங்கள் வரை, விருந்து, விசேஷம் அல்லது பண்டிகை என்று வரும்போது, வாழை இலையில் தான் சாப்பிட வேண்டும் என்று எழுதப்படாத விதி உள்ளது. ஒரு சில வீட்டில், தினமுமே வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் உள்ளது. வாழை இலையில் சாப்பிடப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

    ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது:

    வாழை இலையில் உணவு பரிமாரப்படுவதற்கான முக்கிய காரணம், அதில் இருக்கும் பாளிபெனால்ஸ் என்ற ஆன்டிஆக்சிடன்ட்ஸ் தான். இது கிரீன் டீ மற்றும் பச்சை இலைக் காய்கறிகளில் அதிகம் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடன்ட் லைஃப்ஸ்டைல் டிசீசஸ் என்று கூறப்படும் வாழ்வியல் கோளாறு மற்றும் நோய்களைத் தடுக்கும்.

    விலை மலிவு மற்றும் சௌகரியம்:

    இப்போது தான் விதவிதமான மெட்டல்களில் விதவிதமான பாத்திரங்கள் கிடைக்கின்றன. முன்பு, எவர்சில்வர், மண் பானை மற்றும் வெண்கலப் பாத்திரங்கள் என்று ஒரு சில வகையான பாத்திரங்கள் சமைப்பதற்கு மட்டுமே பயன்பட்டன. எனவே, உணவு பரிமாற, தட்டுக்களுக்கு பதிலாக இலைகளே வசதியாக இருந்தன. பெரும்பாலான வீடுகளில் வாழை மரம் வளர்த்தனர். வாழை இலை கிடைப்பது கடினமானது இல்லை. அதே போல, வாழை இலை கடைகளிலும் மிக மிக குறைந்த விலையில் கிடைத்தன. மேலும், பல விதமான உணவுகளை பரிமாற்ற வாழை இலை தான் சௌகரியமாக இருக்கும்.


    தட்டுகளில் சாப்பிடுவதை விட ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் அதிகம் :

    வாழை இலையை சுத்தம் செய்து வைத்தாலும், உணவு பரிமாறும் முன்பு, நீர் தெளித்து, மீண்டும் சுத்தம் செய்யும் பழக்கம் இருக்கிறது. எனவே, தட்டுக்களை, கிண்ணங்களில் சாப்பிடுவதை விட, வாழை இலையில் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சுகாதாரமான தேர்வாகும்.

    கண்களுக்கு விருந்து:

    விருந்து என்பது நாவுக்கு தான் என்றாலும், பார்ப்பதற்கும் ஈர்க்கும் படி இருக்க வேண்டும். இப்போது கிண்ணம் கிண்ணமாக தட்டுகளில் வைத்து பரிமாறுவது நன்றாக இருந்தாலும், தலை வாழை இலையில் விருந்து பரிமாறுவதைப் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றும். எந்த உணவை இலையில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற முறையும் உள்ளது.

    சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படாது:

    இயற்கை வாழ்வியலோடு ஒன்றிணைந்தது பண்டைய கால வாழ்க்கைமுறை. வீடுகளில் மட்டுமல்லாமல், கோவில், அன்னதானம் மற்றும் பொது இடங்களில் கூட வாழை இலை தான் பயன்பாட்டில் இருந்தது. வாழை இலை எவ்வளவு பயன்படுத்தினாலும், மக்கி விடும். மண்ணுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. எனவே, பிளாஸ்டிக் மற்றும் வேறு சில பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வாழை இலை உணவு சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக