இனிப்பு என்று சொன்னாலே, அதன் சுவை நாவில் ஒட்டிக் கொள்ளும். நம் கற்பனையில், எல்லா இனிப்புகளும் நொடியில் வந்து போகும், இல்லையா?
வயதுவித்தியாசமின்றி இனிப்பு வகைகள் என்றால் எல்லோருக்கும் பிரியம்தான். இனிப்புக் கடைகளில் ட்ரேகளில் வகைகள் பிரித்து அடுக்கப்பட்டிருக்கும் இனிப்புகளைப் பார்த்தேலே நா ஊறும் இல்லை. அப்படியே, நாம் இனிப்புகளின் மீது இருக்கும் சிலவர் நிற ஜரிகை பேப்பர்களை கவனித்திருப்போம்.
அது என்ன என்ற கேள்வியும் நம்மிடம் இருந்திருக்கும். இனிப்புகள் மீது ஒட்டப்படும் சிலவர் நிற பொருள் என்ன? அதன் பயன் என்ன? இதற்கான விடையை இக்கட்டுரையில் காணலாம்.
இனிப்புகள் மீது ஒட்டப்படும் சிலவர் நிற பேப்பர்கள் vark silver leaf என்றழைக்கப்படுகிறது. இது சுத்தமான வெள்ளியால் ஆனது. 2.8 மைக்ரோ கிராம் அளவு கொண்டது. ஆசிய மற்றும் சீனா பாரம்பரிய முறையில் வெள்ளி பாத்திரங்கள் உணவு உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படிதான், நம் ஊரில் வெள்ளி பாத்திரங்களில்தான் குழந்தைக்கு உணவு ஊட்டப்படும்.
ஏனெனில், குழந்தைகளுக்கு பெரிதாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. அவர்களை வைரஸ் மற்றும் பாக்டிரீயாவிகளிடம் இருந்து பாதுகாக்கவும், உடல்நலனிற்கு கேடு ஏதும் நடக்காமல் இருக்க வெள்ளி பாத்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. அப்படிதான், இனிப்புகளில் வெள்ளி பேப்பர்கள் பயன்படுத்தப்படுவதும்.
வார்க் சில்வர் லீஃப் (vark silver leaf)-இன் வேலை என்ன?
வார்க் சில்வர் லீஃப் இனிப்புகளுக்கு மீது ஒட்டப்படுவதால், இனிப்புகள் சீக்கிரம் வீணாகிவிடாமல் இருக்க உதவுகிறது. இந்த வார்க் சில்வர் லீஃப்கள் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனுடக் சேர்ந்து வினைபுரிகிறது. வைரஸ்,பாக்டீரியா உள்ளிடவைகளை அழிக்க உதவுகிறது. இனிப்புகளில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் தாக்குதல்களை சமாளிக்கவும், நம் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கிறது.
இந்த வார்க் சில்வர் லீஃப் பாக்டீரியாவின் வெளிப்புறச் சுவரை தகர்ப்பதுடன், பாக்டீரியாவின் டி,என்.ஏ. மற்றும் மெம்பரன்ஸ் உள் நுழைந்து அவைகளை அழிக்கிறது. இது 99 சதவீதம் வெள்ளியால் ஆனது. இதை நாம் சாப்பிடுவதால் உடல்நலனுக்கு எவ்வித பாதிப்புகளும் வராது. ஆனால், இன்றைய சந்தையில் இனிப்புகளில் அலுமினியன் ஃபாயில் ஷீட்களும் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த அலுமினியம் ஃபாயில் ஷீட்களை உட்கொண்டால் மூளையை பாதிக்கும் என்கிறது மருத்துவ உலகம். அப்படியிருக்க, இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டறிவது எப்படி?
வார்க் சில்வர் லீஃப் - அலுமினியம் ஃபாயில் ஷீட்கள் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?
அலுமினியம் ஃபாயில் ஷீட் உணவு பொருளை சூடாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், இதை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு.
நீங்கள் கடைகளில் இருந்து இனிப்பு வாங்கும்போது, இனிப்பின் மேல் உள்ள சில்வர் நிற பேப்பரை சிறிது கையில் எடுத்து அதை உள்ளங்கையில் தேய்த்துப் பாருங்கள். உண்மையான வெள்ளி, அதாவது வார்க் சில்வர் லீஃப் என்றால் உங்கள் உள்ளங்கையில் அது முற்றிலுமாக துகளாகிவிடும். இதுவே, அலுமினியம் ஃபாயில் ஷீட் என்றால், குட்டி உருண்டையா வரும்.
இனிப்புகளின் மீது இருக்கும் சில்வர் நிற பொருள் குட்டி பந்து போன்று இருந்தால் அது நிச்சயம் அலுமினியன் ஃபாயில் ஷீட்தான் என்பதை தெரிந்துகொள்ளங்கள்.
இனி, இனிப்பு வாங்கும்போது விழிப்போடு இருங்கள். ஏன்னா, நமக்கு இனிப்பு வகைகள்னா அவ்வளவு பிடிக்குமே. அதை தவிர்க்க முடியாதே, ஆனால், தரமானதா என்று பார்த்து வாங்கி சாப்பிடலாம்.
அறிந்து கொள்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக